சிந்துவெளி நாகரிகம் -6th ,9th ,11 ( history, ethics)
1. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _________________
2. சிந்து சமவெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.
3. ஆற்றங்கரைகள் ‘நாகரிகத் தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்
4. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம் : திட்டமிடப்பட்ட நகர அமைப்பு மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
கூற்றும் காரணமும் சரி.
கூற்று தவறு, காரணம் சரி.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறு.
5. கூற்று : ஹரப்பா வெண்கல காலத்தைச் சார்ந்தது.
காரணம் : ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
கூற்றும் காரணமும் சரி.
கூற்று தவறானது. காரணம் சரி.
கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
கூற்று மற்றும் காரணம் தவறானவை.
6. ___________________ மிகப் பழமையான நாகரிகம்.
7. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ___________________ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
8. சிந்துவெளி தொல்பொருள் ஆய்வை மேலும் விரிவு படுத்தியவர் யார்?
9 தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழ்வாய்வுகள் யாவை?
10 ஹரப்பா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
11 மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
12 திராவிட நாகரிகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிட்டவர் யார்?
13 . மக்கள் குழுக்களாகச் சேர்ந்து ___________________ உருவாக்குகிறார்கள்.
14 சிந்துவெளி நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம்
15 தொடக்ககால ஹரப்பா காலம் -
16 முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலம்-
17 பிற்கால ஹரப்பா காலம்-
18 1826 ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்தவர்
19 1831 -அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் -
20 லாகூரில் இருந்து - முல்தான் (கராச்சி) - ரயில் பாதை அமைக்க பட்ட ஆண்டு
21 இந்தியத் தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையர்-
22 ஹரப்பா பகுதியில் ஒரு முத்திரை யாருக்கு கிடைத்தது-
23. ஹரப்பாவில் ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர்
24 தவறானஇணைகண்டறிக
1. ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான்.
2.மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான்.
3 டோலாவிரா - குஜராத், இந்தியா.
4. லோத்தல் - குஜராத், இந்தியா.
5. சர்கோட்டடா - ஹரியானா, இந்தியா.
6. காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா.
7. பனாவலி -ராஜஸ்தான், இந்தியா.
8. ராக்கிகார்ஹி -ஹரியானா, இந்தியா.
25. ஒரு உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்
.
26. ஹரப்பா மக்கள் பின்பற்றிய முறையை பயிரிடல் முறை
27. உழுத நிலங்களை எங்கு காணமுடிகிறது
28. ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது -
29. ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட கைவினை கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட இடம்.
30 தவறான இணை கண்டறிக
1. சங்கு - நாகேஷ்வர்,பாலகோட்.
2. வைடூரியம் -ஷார்டுகை.
3. கார்னிலியன் (மணி) - லோத்தல்.
4. ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - மேற்கு ராஜஸ்தான்.
5. செம்பு - ராஜஸ்தான், ஓமன்.
31. ஹரப்பா மக்கள் செய்ய அறிந்த உலோக கருவிகள் -
32. எந்த படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.
33. செம்பால் ஆன நடனமாடும் பெண் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்
.
34. மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்பை குறித்து கூறும் கல்வெட்டு
.
35. மெலுகா - என்ற சொல் எந்த பகுதியை குறிக்கிறது-
.
36. ஹரப்பாநகர பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள எடைக்கற்கள் -.
37. 16 - இன் விகிதம் கொண்ட சிறிய எடையின் இன்றைய அளவீடு
38. ஹரப்பா மக்கள் அளவீட்டில் பயன்படுத்தி அளவுகோல் ஒரு இஞ்ச்
39 ஹரப்பாவில் கிடைத்தவற்றுள் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் ____ குறியீடுகளைக் கொண்டுள்ளது.
40. ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மத குரு கண்டெடுக்கப்பட்ட இடம்
.
41 சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது
42. மெஹர்கார் பண்பாட்டுடன் தொடர்புடையது
43. இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனர்
44. 1940 -களில் ஹரப்பாவில் அகழ்வாய்வு நடத்தியவர்
45 சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ள மொத்த பரப்பளவு -
46 சிந்து நாகரிகத்தின் எல்லைகள் பொருத்துக:
1. மேற்கு
2. வடக்கு
3. கிழக்கு
4. தெற்கு .
அ -பாகிஸ்தான் - ஈரான் எல்லை - சட்காஜென்டர்.
ஆ,மகாராஷ்டிரம் ,தைமாபாத்.
இ-ஆப்கானிஸ்தான் , ஷார்ட்டுகை.
ஈ- உத்தரப் பிரதேசம் ,ஆலம்கிர்புர்.
47. வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இடம்
.
48. அளவை குறிக்கப்பட்ட அளக்கும் குச்சிகள் எங்கு காணப்பட்டன?
49 சிந்துவெளி மக்கள் எந்த மரத்தை வழிபட்டனர்?
50 சிந்துவெளியில் மைய அரசு இருந்ததற்கான சான்றுகள் எங்கே கிடைத்துள்ளன?
51. பொதுக்குளியல் குளம் எங்கு காணப்பட்டது?
52 தானியக்களஞ்சியம் எங்கே காணப்பட்டது?
53 கண், காது, தொண்டை, தோல் நோய்க்களுக்கு எந்த வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்?
54. தமிழ்நாட்டை திரிமிளிகே என்று அழைத்தவர்கள் யார்?
55தமிழ் மன்னர்களை திராவிட அரசர்கள் என்று அழைத்தவர் யார்?
56. மதுரா விஜயம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
விடைகள் :-
1. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர் _________________
விடை : செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
2. சிந்து சமவெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.
விடை : உலோக காலம்
3. ஆற்றங்கரைகள் ‘நாகரிகத் தொட்டில்கள்’ என அழைக்கப்படக் காரணம்
விடை : பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
4. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.
1 கூற்று : ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம்.
காரணம் : திட்டமிடப்பட்ட நகர அமைப்பு மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
கூற்றும் காரணமும் சரி.
கூற்று தவறு, காரணம் சரி.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறு.
விடை : கூற்றும் காரணமும் சரி.
5. கூற்று : ஹரப்பா வெண்கல காலத்தைச் சார்ந்தது.
காரணம் : ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது.
கூற்றும் காரணமும் சரி.
கூற்று தவறானது. காரணம் சரி.
கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
கூற்று மற்றும் காரணம் தவறானவை.
விடை : கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
6. ___________________ மிகப் பழமையான நாகரிகம்.
விடை : (சுமேரிய) மெசபொட்டாமிய நாகரிகம்
7. இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ___________________ என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.
விடை : அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
8. சிந்துவெளி தொல்பொருள் ஆய்வை மேலும் விரிவு படுத்தியவர் யார்?
சர்.மார்டிமர் வீலர்
9 தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழ்வாய்வுகள் யாவை?
ஆதிச்சநல்லூருக்கு அடுத்து கீழடி
10 ஹரப்பா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1920
11 மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
1922
12 திராவிட நாகரிகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிட்டவர் யார்?
சர் ஜான் மார்ஷல்
13 . மக்கள் குழுக்களாகச் சேர்ந்து ___________________ உருவாக்குகிறார்கள்.
விடை : சமூகத்தை
14 சிந்துவெளி நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம்
விடை-ஹரப்பா.
15 தொடக்ககால ஹரப்பா காலம் -
பொ.ஆ.மு. 3000 - 2600
16 முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலம்-
பொ.ஆ.மு. 2600-1900
17 பிற்கால ஹரப்பா காலம்-
பொ.ஆ.மு. 1900 - 1700
18 1826 ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்தவர்
-சார்லஸ் மேசன்.
19 1831 -அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் -
அலெக்சாண்டர் பர்ன்ஸ்.
20 லாகூரில் இருந்து - முல்தான் (கராச்சி) - ரயில் பாதை அமைக்க பட்ட ஆண்டு
1856.
21 இந்தியத் தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையர்-
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.
22 ஹரப்பா பகுதியில் ஒரு முத்திரை யாருக்கு கிடைத்தது-
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.
23. ஹரப்பாவில் ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர்
சர் ஜான் மார்ஷல்.
24 தவறானஇணைகண்டறிக
1. ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான்.
2.மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான்.
3 டோலாவிரா - குஜராத், இந்தியா.
4. லோத்தல் - குஜராத், இந்தியா.
5. சர்கோட்டடா - ஹரியானா, இந்தியா.
6. காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா.
7. பனாவலி -ராஜஸ்தான், இந்தியா.
8. ராக்கிகார்ஹி -ஹரியானா, இந்தியா.
5. சர்கோட்டடா - ஹரியானா விடை குஜராத், இந்தியா
25. ஒரு உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்
-மொகஞ்சதாரோ.
26. ஹரப்பா மக்கள் பின்பற்றிய முறையை - இரட்டை பயிரிடல்.
27. உழுத நிலங்களை எங்கு காணமுடிகிறது
காலிபங்கன்.
28. ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது -
செபு.
29. ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட கைவினை கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட இடம் -மெசபடோமியா.
30 தவறான இணை கண்டறிக
1. சங்கு - நாகேஷ்வர்,பாலகோட்.
2. வைடூரியம் -ஷார்டுகை.
3. கார்னிலியன் (மணி) - லோத்தல்.
4. ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - மேற்கு ராஜஸ்தான்.
5. செம்பு - ராஜஸ்தான், ஓமன்.
4. ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - மேற்கு ராஜஸ்தான். ( விடை தெற்கு ராஜஸ்தான் )
31. ஹரப்பா மக்கள் செய்ய அறிந்த உலோக கருவிகள் -
செம்பு ,வெண்கலம்.
32. எந்த படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்
ரோரிசெர்ட்.
33. செம்பால் ஆன நடனமாடும் பெண் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்
மொகஞ்சதாரோ.
34. மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்பை குறித்து கூறும் கல்வெட்டு
க்யூனிபார்ம்.
35. மெலுகா - என்ற சொல் எந்த பகுதியை குறிக்கிறது-
சிந்து.
36. ஹரப்பாநகர பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள எடைக்கற்கள் -
கன சதுர வடிவம்.
37. 16 - இன் விகிதம் கொண்ட சிறிய எடையின் இன்றைய அளவீடு
13.63 கிராம்.
38. ஹரப்பா மக்கள் அளவீட்டில் பயன்படுத்தி அளவுகோல் ஒரு இஞ்ச்
-1.75 செ.மீ .
39 ஹரப்பாவில் கிடைத்தவற்றுள் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் ____ குறியீடுகளைக் கொண்டுள்ளது.
26
40. ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மத குரு கண்டெடுக்கப்பட்ட இடம்
மொகஞ்சதாரோ.
41 சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது
பொ.ஆ.மு. 1900.
42. மெஹர்கார் பண்பாட்டுடன் தொடர்புடையது
புதிய கற்காலம்..
43. இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனர்
சார்லஸ் மேசன்.
44. 1940 -களில் ஹரப்பாவில் அகழ்வாய்வு நடத்தியவர்
ஆர்.இ.எம். வீலர்..
45 சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ள மொத்த பரப்பளவு -
1.5 மில்லியன். ச.கி. மீட்டர். (அல்லது) 1.3
46 சிந்து நாகரிகத்தின் எல்லைகள் பொருத்துக:
1. மேற்கு
2. வடக்கு
3. கிழக்கு
4. தெற்கு .
அ -பாகிஸ்தான் - ஈரான் எல்லை - சட்காஜென்டர்.
ஆ,மகாராஷ்டிரம் ,தைமாபாத்.
இ-ஆப்கானிஸ்தான் , ஷார்ட்டுகை.
ஈ- உத்தரப் பிரதேசம் ,ஆலம்கிர்புர்.
1. மேற்கு -பாகிஸ்தான் - ஈரான் எல்லை - சட்காஜென்டர்.
2. வடக்கு-ஆப்கானிஸ்தான் - ஷார்ட்டுகை.
3. கிழக்கு - உத்தரப் பிரதேசம் - ஆலம்கிர்புர்.
4. தெற்கு மகாராஷ்டிரம் - தைமாபாத்.
47. வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இடம்
காலிபங்கன்.
48. அளவை குறிக்கப்பட்ட அளக்கும் குச்சிகள் எங்கு காணப்பட்டன?
ஹரப்பா
49 சிந்துவெளி மக்கள் எந்த மரத்தை வழிபட்டனர்?
அரசமரம்
50 சிந்துவெளியில் மைய அரசு இருந்ததற்கான சான்றுகள் எங்கே கிடைத்துள்ளன?
மொகஞ்சதாரோ
51. பொதுக்குளியல் குளம் எங்கு காணப்பட்டது?
மொகஞ்சதாரோ
52 தானியக்களஞ்சியம் எங்கே காணப்பட்டது?
ஹரப்பா
53 கண், காது, தொண்டை, தோல் நோய்க்களுக்கு எந்த வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்?
கட்டில்
54. தமிழ்நாட்டை திரிமிளிகே என்று அழைத்தவர்கள் யார்?
கிரேக்கர்கள்
55தமிழ் மன்னர்களை திராவிட அரசர்கள் என்று அழைத்தவர் யார்?
நந்தி வர்ம பல்லவன்
56. மதுரா விஜயம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
கங்கா தேவி
52/56...
ReplyDeleteSindhusamaveli test Sunday..