இலக்கணப்போலி
ஓரெழுத்து நிற்க வேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வந்தாலும் பொருள் மாறுபடவில்லை எனில் அதை போலி என்பர்.
போலி மூன்று வகைப்படும்
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
முதற்போலி
ஒரு சொல்லின் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது முதற்போலி எனப்படும்.
எடுத்துக்காட்டு
இலக்கண வழக்கு இலக்கணப் போலி
மஞ்சு - மைஞ்சு
மயல் - மையல்
இடைப்போலி
ஒரு சொல்லில் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறாமல் வருவது இடைபோலி எனப்படும்
எடுத்துக்காட்டு
இலக்கண வழக்கு - இலக்கணப் போலி
முரசு - முரைசு
அரசியல் - அரைசியல்
கடைப்போலி அல்லது ஈற்றுபோலி
ஒரு சொல்லில் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் இருப்பது கடைப்போலி எனப்படும்
எடுத்துக்காட்டு
இலக்கண வழக்கு - இலக்கணப் போலி
நிலம் - நிலன்
பந்தல் - பந்தர்
அகம் - அகன்
முற்றுப்போலி
சொல்லின் அனைத்து எழுத்துக்களும் மாறி நின்று
பொருள் மாறுபடாமல் வருவது முற்றுப்போலி எனப்படும்
எடுத்துக்காட்டு
இலக்கண வழக்கு - இலக்கணப்போலி
ஐந்து - அஞ்சு
முன்பின் தொக்கப்போலி
முன் இருக்க வேண்டிய சொல்பின்னும் , பின் இருக்க வேண்டிய சொல் முன்னும் இடம் மாறி வந்தும் பொருள் மாறுபடாமல் இருப்பது முன்பின் தொக்கபோலி.
எடுத்துக்காட்டு
இலக்கண வழக்கு - இலக்கணப்போலி
தசை -சதை
மரம்நுனி - நுனிமரம்
இல்முன் - முற்றில்
கால்வாய் -வாய்க்கால்
மரூஉ
இலக்கணம் சிதைந்து , சொல்லின் வடிவம் மாறி வழக்கம் திரிந்த சொற்களை சான்றோர்கள் ஏற்றுக்கொண்டு மரூஉ என்று கூறியுள்ளனர்
எடுத்துக்காட்டு
இலக்கண வழக்கு - மரூஉ வழக்கம்
சோழநாடு - சோணாடு
நும்தந்தை - நுந்தை
காஞ்சிபுரம் - காஞ்சி
வினாக்கள் ;-
1 கஞ்சி எதற்கு எடுத்துக்காட்டு ?
A முதற்போலி. B முன்பின் தொக்கபோலி c மரூஉ. D இடைபோலி
2 போலி எத்தனை வகைப்படும் ?
A 1 b 4 c 3 d 2
3 வாய்க்கால் என்ற சொல் எதற்கு எடுத்துக்காட்டு ?
A முதற்போலி. B முன்பின் தொக்கபோலி c மரூஉ. D இடைபோலி
4 ஈற்று போலிக்கு எடுத்துக்காட்டு ?
A சதை b மரம் c அகன் d முரைசு
5 முதல் போலிக்கு எடுத்துக்காட்டு ?
A மையல் B இல்முன் C நிலம் d வாய்க்கால்