வினா எழுத்துக்கள்
வினா பொருளை காட்ட வருகின்ற எழுத்திற்கு
வினா எழுத்து என்றுபெயர்
இவை சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்
வினா எழுத்துக்கள் - ஆ, எ, ஏ, ஓ, யா
எடுத்துக்காட்டு
அவனா (ன் + ஆ )
எது
ஏன்
யார்
அவனோ (ன் + ஓ )
அகவினா ( எ,ஏ, ஓ)
சொல்லில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினால், பிற எழுத்துக்கள் தனிச் சொல்லாக நின்று பொருள் தராது, இவ்வாறு சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்
புறவினா (ஆ,ஓ, ஏ)
சொல்லில் உள்ள வினா எழுத்துக்களை நீக்கினால், பிற எழுத்துக்கள் தனிச் சொல்லாக நின்று பொருள் தரும், இவ்வாறு சொல்லின் புறத்தே நின்று வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்
எடுத்துக்காட்டு
உண்டானா ( ன்+ ஆ)
ஏ என்னும் எழுத்து ஈற்றில் நின்று வினாப் பொருளைத் தருவது தற்காலத்தில் வழக்கில் இல்லை
அதற்கு பதிலாக “தான்” பயன்படுத்தப்படுகிறது
எடுத்துக்காட்டு
அவனே- அவனே தான்
அழுத்தம் கொடுத்து சொல்ல பயன்படுத்தும் எழுத்து “ஏ”
வினாக்கள் :-
1 வினா எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
2 அழுத்தம் கொடுத்து சொல்ல பயன்படுத்தும் வினா எழுத்து ?
3 எந்த வினா எழுத்திற்கு பதில் ” தான் “ பயன்படுத்த படுகிறது?
4.எந்த வினா எழுத்து ஈற்றில் நின்று வினாப் பொருளைத் தருவது தற்காலத்தில் வழக்கில் இல்லை?
மெய்மயக்கம்
மெய் எழுத்து சேர்ந்து வருவதால் மெய்மயக்கம் எனப்படும்
எடுத்துக்காட்டு
கண்ணீர் - கண் + ண்+ஈ+ர் (ண்+ண் சேர்ந்து வந்துள்ளது
செந்நீர் - செந் + ந் + ஈ + ர் (ந்+ந் சேர்ந்து வந்துள்ளது )
உடனிலை மெய்மயக்கம்
சொற்களில் அதே மெய்யெழுத்துக்கள் சேர்ந்து வருவதால் உடனிலை மெய்மயக்கம் எனப்படும்
எடுத்துக்காட்டு
மொத்தம் (த்+த் சேர்ந்து வந்துள்ளது ),
அச்சம்,( ச் +ச் சேர்ந்து வந்துள்ளது )
அப்பம், (ப்+ப் சேர்ந்து வந்துள்ளது)
பக்கம் (க் +க் சேர்ந்து வந்துள்ளது )
க், ச், த், ப் ஆகிய மெய் எழுத்துக்கள் தன் எழுத்துக்களுடன் மட்டுமே சேர்ந்து வரும்
வேற்றுநிலை மெய்மயக்கம்
சேர்ந்து வருவதால் வேற்றுநிலை மெய்மயக்கம் எனப்படும்
எடுத்துக்காட்டு
உண்கலம் -உ ண் + க் + அ + லம் ( ண்+க் )
மோர்க்குழம்பு - மோ+ர்+க்+குழம்பு (ர்+க்)
மேற்கு -மே+ற்+க்+உ (ற்+க்)
ர்,ழ் இரண்டும் தன் எழுத்துகளுடன் சேர்ந்து வராது
தம்முடன் தாம் மயங்குவன -16
க், ச், ட், த், ப் ,ற்
ங், ஞ், ண், ந், ம், ன்
ய், ல், வ், ள்
( ர்,ழ் தவிர 18- 2 = 16 )
தம்முடன் பிற மயங்குவன- 14
ட் ,ற்
ங், ஞ்,ண், ந், ம், ன்
ய், ர், ழ், வ், ல், ள்
( க், ச், த், ப் தவிர 18 - 4 = 4 )
வினாக்கள் :-
1 தம்முடன் தாம் மயங்குவன ?
A 16. B 12. C 10. D 11
2 தம்முடன் பிற மயங்குவன?
A 13. B 14 D 2. D 4
3 மெய்மயக்கம் எத்தனை வகைப்படும்?
A 2 B 4 C 5. D3
4 மேற்கு - என்பது?
A தன்னிலை மெய்மகக்கம் B.வேற்றுநிலை மெய்மயக்கம் C. மரூஉ D. மெய்மயக்கம் இல்லை
5 தன்னுடன் சேர்ந்து வரும் மெய்யெழுதுகள் எத்தனை?
A 4. B 2. . C 6. D 5
6 தன்னுடன் சேர்ந்து வாரா மெய்யெழுத்து எத்தனை?
A 4. B 2. C 6. D 5