பொருள் இலக்கணம் ( அகப்பொருள், புறப்பொருள்) ஐந்திணை

Krishnakumar R
0

பொருள்இலக்கணம் 


பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இரண்டு வகைப்படும்


 அகப்பொருள் 


அகப்பொருள் பற்றிய ஒழுக்கமே அகத்திணை எனப்படும் 


( திணை - ஒழுக்கம் )


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை , கைக்கிளை, பெருந்திணை என அகத்திணை ஏழு வகைப்படும்

 குறிஞ்சி முதல் பாலை வரை உள்ள ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும் 


அகப் பொருளுக்கு உரிய பொருள்கள் :-

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் 


முதற்பொருள் 


நிலமும், பொழுதும் என முதற்பொருள் இருவகைப்படும் 


நிலம் 

நிலம் ஐந்து வகைப்படும்


 குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் முல்லை - காடும் காடு சார்ந்த இடமும் 

மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும் 

நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும் 

பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும் 

அல்லது சுரமும் சுரம் சார்ந்த இடமும்


பொழுது 

பொழுது சிறுபொழுது, பெரும்பொழுது என இரு வகைப்படும்


பெரும்பொழுது

பெரும்பொழுது ஒரு ஆண்டின்  ஆறு கூறுகள் 


கார்காலம் - ஆவணி , புரட்டாசி 

குளிர்காலம் அல்லது கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை 

முன்பனிக்காலம் - மார்கழி , தை 

பின்பனிக் காலம் - மாசி, பங்குனி 

இளவேனிற் காலம் - சித்திரை , வைகாசி 

முதுவேனிற் காலம் - ஆனி , ஆடி 



சிறுபொழுது 


ஒரு நாளின் ஆறு கூறுகள்

 ஒவ்வொரு சிறுபொழுதும் நாலு மணி நேரம் அல்லது 10 நாளிகை கொண்டதாகும் 


காலை - 6 மணி முதல் 10 மணி வரை நண்பகல் - 10 மணி முதல் 2 மணிவரை எற்பாடு - 2 மணி முதல் 6 மணி வரை 

( எல்+ பாடு எல் -சூரியன்  பாடு - மறையும்)

மாலை - 6 மணி முதல் 10 மணி வரை 

யாமம் - 10 மணி முதல் 2 மணி வரை 

வைகறை - 2 மணி முதல் 6 மணி வரை 


திணையும் பொழுதும் 


திணை

பெரும்பொழுது

சிறுபொழுது

குறிஞ்சி

-குளிர்காலம், முன்பனிக்காலம்

யாமம் 

முல்லை

கார்காலம்

மாலை

மருதம்

ஆறு  பொழுதுகளும்

வைகரை

நெய்தல்

ஆறு பொழுதும்

எற்பாடு

பாலை

இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் , பின்பனிக் காலம்

நண்பகல்



ஆ- முதன்முதலில் குறிஞ்சி நிலத்திற்கு உரிய விலங்கு 


உழவு தொழில் தோன்றிய நிலம் -முல்லை 


கருப்பொருள்

 தெய்வம் , மக்கள், உணவு, ஊர், தொழில் 


குறிஞ்சி நிலத்திற்கு உரிய கருப்பொருட்கள் 


தெய்வம்  - முருகன் 

மக்கள்  - குறவர்,  குறத்தியர் , வெப்பன் 

உணவு -  மலை நெல் ,  தினை

ஊர் - சிறுகுடி 

தொழில் - தேனெடுத்தல் ,  கிழங்குகளை அகழ்தல்,  திணை விதைப்பது


 முல்லை நிலத்திற்கு உரிய கருப்பொருள் 


தெய்வம்  - திருமால் 

மக்கள் - ஆயர் , ஆய்ச்சியர்,  தோன்றல் 

உணவு - வரகு , சாமை

ஊர் - பாடி , சேரி 

தொழில் - நிரை மேய்தல், ஏறுதழுவுதல் , பால் கடைவது , வரகு விதைப்பது


மருதம் நிலத்திற்கு உரிய கருப்பொருள் 


தெய்வம்  - இந்திரன் 

மக்கள் - உழவர் , உழத்தியர்  , ஊரன் 

உணவு - செந்நெல், வெண்ணெல் அரிசி

ஊர் - பேரூர் , மூதூர் 

தொழில் - களை பறித்தல் , நெல் அரித்தல் , நகர் அமைப்பது ,  ஆட்சி புரிவது 


நெய்தல் நிலத்திற்கு உரிய கருப்பொருள்கள் 


தெய்வம் -  வருணன் 

மக்கள் - பரதன், பரதியர் , சேர்ப்பன் 

உணவு - மீன்

ஊர் -  பட்டினம் , பாக்கம் 

தொழில் - மீன் பிடித்தல் , உப்பு விளைவித்தல், மரக்கலம் ஏறி வாணிபம் செய்வது


பாலை நிலத்திற்குரிய கருப்பொருள் 


தெய்வம் -  கொற்றவை( காளி )

 மக்கள் - எயினர், எயிற்றியர்,  காளை

 உணவு  - வழிப்பறி 

 ஊர் - குறும்பு 

தொழில் - நிறை கவர்தல்,  வழிப்பறி


உரிப்பொருள் 


குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்  முல்லை  - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் 

மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும் 

பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும் 


புறத்திணை அல்லது புறப்பொருள்


 அறம், பொருள்,இன்பம், வீடு பற்றியும் கல்வி ,வீரம் ,கொடை , புகழ் பற்றியும் கூறுவது புறத்திணை ஆகும் 


புறத்திணை 12 வகைப்படும் 


1- வெட்சித்திணை - நிரை கவர்தல்

2 - கரந்தை திணை - நிரை மீட்டல் 

3 - வஞ்சி திணை - பகைவர் நாட்டைக் கைப்பற்றி கருதி போருக்குச் செல்லுதல் 

4 - காஞ்சித்திணை - நாட்டை கைப்பற்ற வந்த அரசனோடு போரிடல் 

5-நொச்சித் திணை - மதிலை காப்பது

6- உழிஞைத் திணை - மதிலை கைப்பற்றுதல்

7-  தும்பைத்திணை - வெற்றி ஒன்றே குறிக்கோளாய் கொண்டு ஊக்கத்தோடு போரிடல் 

8- வகைத்தினை - வெற்றி பெற்ற மன்னன் வாகை சூடி மகிழ்வான் 

9- பாடாண் திணை - மன்னனின் புகழ் வலிமை   இரக்கம்முதலியவற்றை புகழ்தல் 

10 - பொதுவியல் திணை - வெட்சி முதல் படாண் வரை உள்ள திணைகளுக்கும் பொதுவானவற்றையும்  அவற்றில் கூறப்படாத செய்திகளையும் கூறுதல்

11-  கைக்கிளை- ஒருதலைக் காமம் 

12 - பெருந்திணை - பொருந்தாக் காமம்

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top