அளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது,
சொல்லின் முதல் இடை இறுதியில் நிற்கும்
உயிர் நெடில் எழுத்துக்கள் எழும்,
தமக்கு உரிய இரண்டு மாத்திரை அளவில்
இருந்து நீண்டு ஒலிக்கும் ,.
அவ்வாறு நீண்டு ஒலிப்பது அளபெடை எனப்படும்
அளபெடை - அளபு + எடை என பிரியும்
அளபு என்பதன் பொருள் மாத்திரை
எடை என்பதன் பொருள் எடுத்தல்
மாத்திரை
எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.
அளபெடை இரண்டு வகைப்படும்
உயிரளபெடை
ஒற்றளபெடை
உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது,
அந்த ஓசை நிறைவுசெய்ய உயிர் நெடில் எழுத்துக்கள்,
7-ம் அளபெடுக்கும் அவ்வாறு அளபெடுக்கும் போது
அவற்றின் இனமான குறில் எழுத்துக்கள் அருகில் வரும்.
எடுத்துக்காட்டு
ஆ இனமான எழுத்து அ வரும்.
ஊ இனமான எழுத்து உ வரும்
உயிர் அளபெடை மூன்று வகைப்படும்
செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
செய்யுளில் ஓசை குறையும் இடத்தில்
அதன் ஓசையை நிறைவு செய்ய
சொல்லின் முதல் இடை இறுதியில் நின்ற
உயிர் நெடில் எழுத்துக்கள் எழும்,
தமக்கு இனமாகிய குறில் எழுத்துகளை பெற்று
தனக்கு உரிய மாத்திரையிலிருந்து மிகுந்து ஒலிக்கும்
இதனையே செய்யுளிசை அளபெடை எனக்கூறுவர்
இதற்கு இசைநிறை அளபெடை என வேறு பெயரும் உண்டு
ஈரசை கொண்டு சீர்களில் மட்டும் வரும்
தடையை நீக்கினால் சீரும் தலையும் சிதையும்
எடுத்துக்காட்டு
கடாஅ - கட்+ ஆ (உயிர் நெடில்) + அ (ஆ இன எழுத்து )
படாஅ - பட்+ஆ (உயிர் நெடில்) + அ (ஆ இன எழுத்து )
இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத போதும்
செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு,
உயிர் குறில், நெடிலாகி ஆகி மேலும் அளவெடுப்பது
இன்னிசை அளபடை எனப்படும்.
இது மூன்று ஆசை கொண்ட சீர்களில் மட்டுமே வரும் (காய் சீர்)
அளபெடையை நீக்கினால் சீரும் தளையும் சிதையாது
எடுத்துக்காட்டு
கெடுப்பதூஉம் - கெடுப்பதும்
து - த்+ உ
தூ -த்+ஊ+ உ
உ - உயிர் குறில் ஊ - எனும் உயிர்நெடிலாகி, மேலும் உ இன எழுத்தையை அளப்பெடுக்கிறது
எடுப்பதூஉம்
சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் ,
பெயர்ச்சொல் வினையெச்ச பொருள் தரும் பொருட்டு அளவெடுப்பது
சொல்லிசை அளபெடை எனப்படும்.
ஒரு சொல் மற்று சொல்லாக பொருள்பட
வரும் அளபெடை சொல்லிசை அளபெடை ஆகும்
சொல்லிசை அளபெடை இ என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும்
எடுத்துக்காட்டு
நசைஇ
நசை என்றால் விரும்புதல் (பெயர்ச்சொல்)
நசைஇ -நசை + வ் + இ
நசைஇ என்றால் விரும்பி( வினையச்சம் )
அடிதழ் தழ் என்றால் தழுவுதல்( பெயர்ச்சொல் )
தழுவி
அடிதழீஇ - அடி +தழுவி + வ்+இ
தழுவி என்றால் இறையச்சம் ( வினையெச்சம்)
ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவுசெய்ய மெய் எழுத்துக்கள் அளப்பெடுக்கும்.
ஒற்றளபெடை சொல்லின் இடையிலும்,இறுதியிலும் மட்டுமே வரும் .
வல்லின மெய்களான (க், ச், ட், த், ப், ற்) ஆறும் இடையினத்தில் (ர், ழ்) தவிர்த்து எஞ்சிய பத்து மெய்யும் ,ஆயுதமும் அந்தந்த எழுத்து அதன் பக்கத்தில் அளப்பெடுக்கும்
எடுத்துக்காட்டு
அரங்ங்கம்
வெஃஃகு
மன்னே