மரபுப் பிழை (marabu pilai )
பறவை மற்றும் விலங்குகளின் ஒலிக்குறிப்பு சொற்கள்
01 ஆந்தை -அலறும்
02 கோழி - கொக்கரிக்கும்
03 குயில் - கூவும்
04 காகம் - கரையும்
06 கிளி - பேசும் (கொஞ்சும்)
07 மயில் - அகவும்
08 நாய் - குறைக்கும்
09 நரி - ஊளையிடும்
10 யானை - பிளிறும்
11 வானம்பாடி - பாடும்
12 குதிரை - கனைக்கும்
13 புலி - உறுமும்
14 பன்றி - உறுமும்
15 சிங்கம் - கர்ஜிக்கும் (முழங்கும்)
16 குருவி - கீச்சிடும்
17 கோட்டான் , கூகை - குழறும்
18 வாத்து - கத்தும்
19 வண்டு - முரலும்
20 பசு - கதறும்
21 சேவல் - கூவும்
22 புறா - குனுகும்
23 எருது - எக்காளமிடும்
24 எலி - கீச்சிடும்
25 ஆடு - கத்தும்
26 குரங்கு - அலப்பும்
27 பாம்பு - சீறும்
28 பல்லி - சொல்லும்
29 தவளை - கத்தும்
30 பூனை - சீரும்
பறவை மற்றும் விலங்குகளின்
இளமைப் பெயர்கள்
01 எலி - குட்டி
02 குருவி - குஞ்சு
03 கோழி - குஞ்சு
04 கீரி - பிள்ளை
05 பசு - கன்று
06 மான் - கன்று
07 யானை - கன்று
08 எருமை - கன்று
09 பன்றி - குட்டி
10 ஆடு - குட்டி
11 குதிரை - குட்டி
12 குரங்கு - குட்டி
13 நாய் - குட்டி
14 அணில் - பிள்ளை
15 புலி - பறழ்
16 பூனை - குட்டி
17 சிங்கம் - குருளை
18 கிளி - குஞ்சு
தாவரப் பெயர்கள்
01 வாழை - கன்று
02 தென்னை - பிள்ளை
03 மா - கன்று
04 சோளம் - தட்டு
05 தாழை - மடல்
06 வாழை - இலை
07 வேப்பம் - தழை
08 மூங்கில் - இலை
09 கமுகம் - கூந்தல்
10 முருங்கை - கீரை
11 தென்னை - ஓலை, கீற்று
12 பனை - ஓலை
13 நெல் - தாள்
14 தென்னை - குரும்பை
15 வாழை - தண்டு
16 கீரை - தண்டு
17 கொய்யா - பிஞ்சு
18 தினை - தாள்
19 கத்தரி - பிஞ்சு
20 வெள்ளரி - பிஞ்சு
21 பனை - குறும்பை
22 பலா - இலை
23 வெங்காயம் - தாள்
24 ஆவாரம் - இலை
25 கேழ்வரகு - தட்டை
26 வாழை - குருத்து
27 மா - தளிர்
28 ஈச்சம் - ஓலை
29 மா - இலை
30 பலா - மூசு
31 வாழை - கச்சல்
32 அவரை - பிஞ்சு, பொட்டு
33 மா - வடு
34 இளம் தேங்காய் - வழுக்கை
35 முற்றிய தேங்காய் - நெற்று
செடி , கொடி மற்றும் மரங்களின் தொகுப்பு பெயர்கள்
01 பூந்தோட்டம்
02 பூஞ்சோலை
03 வாழைத்தோட்டம்
04 தேயிலைத்தோட்டம்
05 வெற்றிலைத்தோட்டம்
06 கருப்பங்கொல்லை
07 சோளக்கொல்லை
08 வேலங்காடு
09 ஆலங்காடு
10 பனந்தோப்பு , பனங்காடு
11 மாந்தோப்பு
12 தென்னந்தோப்பு
13 முந்திரித்தோப்பு
14 பலாத்தோப்பு
15 சவுக்குத்தோப்பு
16 இலுப்பைத் தோப்பு
17 கொய்யாத்தோப்பு
18 நெல் வயல்
19 திராட்சைகளை
20 சுள்ளி கற்றை
21 பாக்கு குலை
22 பூங்கொத்து
விலங்கு பொருட்களின் தொகுப்பு பெயர்
01 ஆட்டு மந்தை
02 எறும்பு சாரை
03 பசுநிரை
04 யானைக்கூட்டம்
05 மாட்டு மந்தை
06 கற்குவியல்
07 சாவிக்கொத்து
08 வீரர் படை
09 வைக்கோல் போர்
10 மக்கள் தொகுப்பு
விலங்குகளின் கழிவு பெயர்கள்
01 மாட்டுச் சாணம்
02 ஆட்டுப் புழுக்கை
03 குதிரை இலத்தி
04 யானை இலண்டம்
பறவை விலங்குகளின் இருப்பிடம் பெயர்கள்
01 ஆட்டுப்பட்டி
02 எலிவளை
03 குதிரை கொட்டில்
04 குருவிக்கூடு
05 கோழிகூடு
06 கோழிப்பண்ணை
07 மாட்டுத்தொழுவம்
08 யானைக்கூட்டம்
09 சிலந்திவலை
10 கரையான் புற்று
11 வாத்துப் பண்ணை
பெயருக்கேற்ற வினைச்சொற்கள்
01 ஆப்பம் தின்
02 திரியை கொழுத்து
03 ஏர்உழு
04 களை பறி
05 நார்க்கிழி
06 நெல் தூற்று
07 இலைபறி
08 கதிர் அறு
09 கல் உடை
10 காய்கறி அறி
11 நீர் பாய்ச்சு
12 நீர் குடி
13 தண்ணீர் குடி
14 பால் பருகு
15 பழத்தின்
16 பாட்டு பாடு
17 கூரைவேய்
18 சோறு உன்
19 சோறு சமை
20 கோலம் இடு
21 குடம் இடு
22 பானைவனை
23 தயிர் கடை
24 பாய் பின்னு
25 விளக்கை ஏற்று
26 தீமூட்டு
27 வெற்றிலை மென்
28 படம் வரை
29 விடை கூறு
30உணவு பரிமாறு
31 விதையை விதை
32அம்பு ஏய்
33 சந்தனம் பூசு
34 முறுக்கு பறி
35 மாலை தொடு
36 ஓவியம் புனை
37 கூடை முடை
38 ஆடை நெய்
39 சுவர் எழுப்பு
40 மரம் வெட்டும்
41 மாத்திரை விழுங்கு
42 செய்யுள் இயற்று
43 அடுப்பு மூட்டு
44 அழுக்கைதுடை
45 அவல் மெல்லு
46 இட்லி அவி
47 தோசை சுடு
48 உப்பு இடு
49 உணவு ஊட்டும்
50 ஏலம் கூறு
51 கம்பு தின்
52 கை கழுவு
53 கிளை ஒடி
54 குற்றம் சாட்டு
55 செடி நடு
56 செலவிடு
57 சோறு வடி
58 வாடை அடிக்கும்
59 நகை அணி
60 நூல் எழுது
61 நெய் உருக்கு
62 பறை கொட்டு
63 பஞ்சு அடை
64 தேநீர் பருகும்
65 வண்ணம் தீட்டு
66 விரகு கட்டு
67 கட்டுரை எழுது
68 நாற்று நடு
69 மலர் கொய்
70 சிற்பம் செதுக்கும்
71 கவிதை இயற்றி
72 தென்றல் வீசும்
73 புயல் அடிக்கும்
74 சங்கு முழங்குகிறது
75 அலை வீசுகிறது
76 பசு கன்று ஈன்றது
77 தாள் அடி
78 வீடு கட்டு
79 மாவு இடி
80 மருந்து புகட்டு
81 பொருள் ஈட்டு
பெயர் கேற்ற வினைச்சொற்களில்
ReplyDelete27. வெற்றிலை மென்
மற்ற அனைத்து பக்கங்களிலும் வெற்றிலை தின் என உள்ளது
எது சரி?