விசையும் இயக்கமும் -ஆறாம் வகுப்பு
தள்ளுதல் அல்லது இழுத்தல் ஆகிய செயல்கள் பொருட்களை இயங்க செய்கின்றன.
காலத்தைப் பொறுத்து ஒரு பொருளின் நிலை மாறும் எனில் அது இயக்கம் எனப்படும். அப்பொருள் ஒரே இடத்தில் இருக்கும் எனில் அது ஓய்வு நிலை எனப்படும் .
ஓய்வு நிலை அல்லது இயக்க நிலை ஆகிய இரண்டும் சார்புடையவை ஆகும்.
இந்தியாவில் பழங்கால வானியலாளர் ஆரியபட்டா " நீங்கள் ஆற்றில் ஒரு படகில் செல்லும்போது எவ்வாறு ஆற்றில் கரையானது உங்களுக்கு பின்புறம் எதிர் திசையில் செல்வது போல தோன்றுகிறதோ அதை போல வானில் உள்ள நட்சத்திரங்களையும் நாம் காணும்போது அவை கிழக்கிலிருந்து மேற்காக செல்வதாக தோன்றுவதால் நிச்சயம் நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக தான் சுற்ற வேண்டும் என்று அனுமானித்தார் .
இழுத்தல் அல்லது தள்ளுதல் என்ற நிகழ்வானது மனிதர்கள் அல்லது விலங்குகள் போன்ற உயிருள்ள காரணிகளால் ஏற்படுகின்றது.
புல்வெளியில் வளர்ந்துள்ளது உயரமான புற்கள் காற்றில் ஆடுவதும், நீரில் மரத்துண்டானது அடித்து செல்லப்படுவதும் உயிரற்ற காரணிகளால் ஏற்படுகின்றது.
பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செலுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களை விசை என்று அழைக்கப்படுகிறது
விசை காரணிகளின் அடிப்படையில் இரண்டு வகைப்படும் :-
1 உயிருள்ள காரணி
2 உயிரற்ற காரணி
தொடுதலின் அடிப்படையில் இரண்டு வகைப்படும் :-
1 தொடுவிசை
எடுத்துக்காட்டு - காற்றில் அசைந்தாடும் மாடு வண்டி இழுப்பதும்
2 தொடா விசை
எடுத்துக்காட்டு - காந்தவிசை மற்றும் புவி ஈர்ப்பு விசை
விசை ஏற்படுத்தும் மாற்றங்கள் :-
விசையானது ஒரு பொருளின் மீது செயல்படும் போது அப்பொருளை ஓய்வு நிலையில் இருந்து இயக்க நிலைக்கு கொண்டு வருகிறது.
ஒரு பொருளின் மீது விசை செயல்படும் போது அப்பொருள் விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது.
ஒரு பொருளின் இயக்க நிலையையோ அல்லது ஓய்வு நிலையையோ மாற்றக்கூடியதும்,
பொருளின் வேகம் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யக்கூடியதும்,
இயக்கத்தினை நிறுத்தவும், திசையை மாற்றவும் மற்றும்
பொருளின் வடிவத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யக்கூடியதுமாகிய காரணியே விசை என அழைக்கப்படுகிறது
விசையின் ஏற்படுத்தும் விளைவுகள்:-
1 ஒரு பொருளை ஓய்வில் இருந்து இயக்க நிலைக்கோ அல்லது இயக்க நிலையில் இருந்து ஓய்வு நிலைக்கோ மாற்றும்.
2 இயங்கும் பொருளின் வேகம் அல்லது திசைவேகம் அல்லது இரண்டையும் மாற்றும்.
3 பொருளின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்
இயக்கத்தின் வகைகள்
நேர்கோட்டு இயக்கம்
நேர்கோட்டுப் பாதையில் நடைபெறும் இயக்கம்
எடுத்துக்காட்டு - நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன்
வளைவு பாதை இயக்கம்
முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பாதையின் திசையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் பொருளின் இயக்கம் .
எடுத்துக்காட்டு - வீசி எறியப்பட்ட பந்து
வட்டப்பாதை இயக்கம்
வட்டப் பாதையில் நடைபெறும் இயக்கம்
எடுத்துக்காட்டு - கயிற்றின் முனையில் கட்டப்பட்டு சுற்றப்படும் கல்லின் இயக்கம்.
தற்சுழற்சி இயக்கம்
ஒரு அச்சினை மையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம்
எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம்
அலைவு இயக்கம்
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம்
எடுத்துக்காட்டு - தனி ஊசல்
ஒழுங்கற்ற இயக்கம்
வெவ்வேறுதிசையில்நகரும்பொருளில்இயக்கம்
எடுத்துக்காட்டு - மக்கள் நெருக்கம் மிகுந்த தெருக்களில் நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம்
அலைவானது அதிவேகமாக நடைபெறும் போது நாம் அந்த இயக்கத்தினை அதிர்வுறுதல் என அழைக்கிறோம்
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்கத்தை கால ஒழுங்கு இயக்கம் என்கிறோம்
புவியை சுற்றி வரும் நிலவின் இயக்கம் ( கால ஒழுங்கு இயக்கம் ஆனால் அலைவு இயக்கம் அல்ல )
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் இயக்கம் ( கால ஒழுங்கு மற்றும் அளவு இயக்கமாகும் )
அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும் ஆனால் கால ஒழுங்கு இயக்கங்கள் அனைத்தும் அலைவு இயக்கமாக காணப்படாது.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக நடைபெறாது இவ்வியக்கம் கால ஒழுங்கற்ற இயக்கம் எனப்படும்
வேகம் :-
ஓரலகு காலத்தில் ஒரு பொருள் கடந்த தூரமே அதன் வேகம்.
ஒரு பொருளானது 'd' தொலைவினை ' t ' கால இடைவெளியில் கடந்தால்
வேகம் (S) = கடந்த தொலைவு ( d) /எடுத்துக்கொண்ட காலம்(t)
S= d/t
பொதுவாக நாம் அறிவியலில் SI அலகுகளையே பயன்படுத்துகிறோம்.
தொலைவின் SI அலகு மீட்டர் (m). காலத்தின் அலகு வினாடி (s). எனவே, மீட்டர்/வினாடி (m/s) என்பது வேகத்திற்கான SI அலகாகும்
கடந்த தொலைவு d = வேகம் (s) × காலம் (t)
d = s × t
உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார் .
தரைவாழ் விலங்குகளில் சிறுத்தை ஆனது 112 கிலோமீட்டர் /மணி வேகத்தில் ஓடக்கூடிய விலங்காகும்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தினை நாம் சீரான இயக்கம் என்றும் , மாறுபட்ட வேகத்தில் இயங்கும் பொருளின் இயக்கத்தை சீரற்ற இயக்கம் என்றும் அழைக்கிறோம்.
இயக்கத்தின் வகைகள்
அ. இயங்கும் பாதையின் அடிப்படையில்
1 நேர்கோட்டு இயக்கம்
2 வளைவு பாதை இயக்கம்
3 வட்டப் பாதை இயக்கம்
4 தற்சுழற்சி இயக்கம்
5 அலைவு இயக்கம்
6 ஒழுங்கற்ற இயக்கம்
ஆ. கால இடைவெளி அடிப்படையில்
1 கால ஒழுங்கு இயக்கம்
2 கால ஒழுங்கற்ற இயக்கம்
இ. சீரான வேகத்தில் அடிப்படையில்
1 சீரான இயக்கம்
2 சீரற்ற இயக்கம்
"ரோபாட் உத்தரவுக்கு படிந்த ஊழியர்" எனப்பொருள்படும் " ரோபாட்டா" என்ற சசெக்கோஸ்லோவாக்கியா வார்த்தையிலிருந்து ரோபாட்டா என்ற வார்த்தையானது உருவாக்கப்பட்டது .
ரோபாடிக்ஸ் என்பது ரோபோக்களை பற்றி அறியும் அறிவியல் பிரிவாகும்.
ரோபோக்களின் உணர்திறன் :-
மின்னணு உணர்விகள் ரோபோக்களின் கண்களும் ,காதுகளும் உள்ளன.
இரட்டை கேமரா அதற்கு இந்த உலகம் பற்றிய முப்பரிமாணப் பின்பத்தினை அளிக்கிறது .
அழுத்த உணர்விகள் அவற்றிக்கான நுட்பத்தினை அளித்து ஒரு முட்டையை அல்லது பாரமான பொருள் ஒன்றை தூக்கும்போது எவ்வாறு பிடிக்க வேண்டும் என உணர்த்துகிறது .
அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறி ரேடியோ அலைகள் பரிமாற்றம் மூலம் செய்திகளை அனுப்பவும் பெறவும் உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளையை போன்று சிந்திக்கத் தக்க வகையில் கணினி செயல்பாடுகளை உருவாக்குவதாகும்
நானோ ரோபாட்டுகள் நுண்ணிய இடங்களில் தங்கள் பணிகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிகச் சிறிய ரோபாட்டுக்ள் ஆகும்