குற்றியலுகரம்
குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம்
குறுமை- குறுகிய
இயல் - ஓசை
உகரம் - உ என்னும் எழுத்து
குறுகிய ஓசை உடைய உகரம் குற்றியலுகரம் எனப்படும்
எடுத்துக்காட்டு
நாடு
நா - தனி நெடில் டு- வல்லின உகரம் (குற்றியலுகரம் )
பண்பாடு
1. நெடில் தொடர் குற்றியலுகரம்
உயிர் நெடில் , உயிர் மெய் நெடில் எழுத்துக்களை
அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரம் தொடர் குற்றியலுகரம்
நெடில் தொடர் குற்றியலுகரம் இரண்டு எழுத்துக்கள் ஆகவே வரும்
ஆறு
காசு
ஆ- உயிர் நெடில் கா- உயிர்மெய் நெடில்
2. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
உயிர் தொடர் குற்றியலுகரம் என்பது கு, சு, டு, து ,பு, று என்னும் எழுத்துக்கு முன் 2 முதலான பல எழுத்துக்களை பெற்று வரும்.
ஈற்று எழுத்துக்கு முன் உயிர்மெய் குறிலகவோ , நெடிலகவோ இருக்கும்.
எடுத்துக்காட்டு
காட்டாறு
பாலாறு
அழகு
3.வன்தொடர் குற்றியலுகரம்
வல்லின எழுத்துக்களை அடுத்து சொல்லின் ஈற்றில் வரும் வல்லின உகரம் வன்தொடர் குற்றியலுகரம் எனப்படும் .
எடுத்துக்காட்டு
காற்று. ற் - வல்லின எழுத்து க், ச், ட்,த், ப், ற்
பத்து த் - வல்லின எழுத்து
சுக்கு. க் - வல்லின எழுத்து
ஆச்சு. ச் - வல்லின எழுத்து
4.மென்தொடர் குற்றியலுகரம்
மெல்லின மெய் எழுத்துக்களை அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரம் குற்றியலுகரம் எனப்படும்
எடுத்துக்காட்டு
பங்கு மெல்லின் மெய் -ங்,ஞ, ண், ந், ம்,ன்
கம்பு
கண்டு வல்லின உகரம் - கு,சு,டு,து,பு,று
மஞ்சு
கன்று
5.இடைத்தொடர் குற்றியலுகரம்
இடையின மெய் எழுத்துகளைத் தொடர்ந்து சொல்லின் ஈற்றில் வரும்
வல்லின உகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
எடுத்துக்காட்டு
இடையின மெய் - ய், ர்,ல், வ்,ழ்,ள்
வல்லின உகரம் - கு,சு,டு,து,பு,று
செய்து
சார்பு
சால்பு
மூழ்கு
6. ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
ஆயுத எழுத்தை தொடர்ந்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்
எடுத்துக்காட்டு
அஃது
எஃகு
முற்றியலுகரம்
தன் மாத்திரை அளவில் இருந்து குறையாமல் ஒலிக்கும் உகரம் முற்றியலுகரம் எனப்படும்
தனிக்குறிலை அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லினமும்
பொதுவாக சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரம்
பொதுவாக சொற்களின் இறுதியில் வரும் இடையின உகரமும் முற்றியலுகரம் எனப்படும்
குற்றியலிகரம்
நிலைமொழியில் குற்றியலுகரம் ஆக இருந்து
வருமொழி யகரம் வரின்
நிலைமொழி உகரம் இகரமாகத் திரிந்து
தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து
அரை மாத்திரையாகக் ஒலிக்கும்
இதற்கு குற்றியலுகரம் என்று பெயர்
எடுத்துக்காட்டு
வரகு யாது
வண்டு யாது
வரகு - நிலைமொழி - குற்றியலுகரம்
யாது - வரும்மொழி - யாகரம்
கு (க்+உ)என்னும் உகரம் இகரமாகத் திரிந்து
தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து
அரை மாத்திரை அளவாக ஒலிக்கிறது