பிற்கால சோழர்கள் முக்கிய குறிப்பு/ pirkaala solarkal notes

Krishna kumar
0

 பிற்கால சோழர்கள்
(TNPSC & TNUSRB இலவச முக்கிய குறிப்புக்கள் மட்டும் )


* பண்டைய சோழ அரசின் தலைநகரம் உறையூர் இன்றைய திருச்சி. இந்த வம்சம் கரிகாலன் காலத்தில் செழிப்பாக இருந்தது


* விஜயாலயன் சோழ வம்சத்தை நிறுவினார். இவரின் தலைநகரம் தஞ்சாவூர


* முதலாம் ராஜேந்திர சோழன் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரம்


* சோழப் பேரரசின் வலிமை பெற்ற அரசன் முதலாம் ராஜராஜன்


* முதலாம் ராஜராஜன் கட்டிய கோயில் ராஜ ராஜேஸ்வரம் ( பிரகதீஸ்வரர் கோயில்) தஞ்சாவூர் என்று அழைக்கப்படுகிறது


* முதலாம் ராஜேந்திரன் 1023 ல் அரியணை ஏறினார். சிறப்பு பெயர் கங்கை கொண்டான். இவர் ஸ்ரீ விஜயத்தை ( தெற்கு சுமத்ரா) கைப்பற்றினார்


* வீரராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டு கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார். 


* முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் இடையிலான திருமண உறவு தொடங்கியது. அவருடைய மகள் குந்தவை இளவரசர் விமலாதித்தனை மணந்தார். அவர்களின் மகனான ராஜராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்தரின் மகளான அம்மங்கா தேவியை மணந்தார். அவர்களின் மகன் முதலாம் குலோத்துங்கன்


* விஜயாலயன் வழிவந்த கடைசி அரசர் அதிராஜேந்திரன்


* அதிராஜேந்திரன் மறைவைத் தொடர்ந்து ராஜேந்திர சாளுக்கியன் சோழ அரியணையைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழன் எனும் பெயரில் சாளுக்கிய சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தார்


* 1279ல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் இராஜேந்திர சோழனைத் தோற்கடித்து பாண்டிய ஆட்சியைத் தோற்றுவித்தார்


* மண்டலம் - நாடு - கிராமம். கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அளவு 


* ஊரார்-நிலவுடைமையாளர்கள்


* சபையோர் - பிராமணர் கிராமங்களை சேர்ந்த பொது நிர்வாகத்தின் நிதி நிர்வாகத்தின் நீதி வழங்குபவர்கள்


* வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர்


* நாட்டார் - நாடுகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வைப்பார்கள்


 * உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேயகிராமம் ஆகும். குடவோலை முறை குறித்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகிறது. குடும்பு( வார்டு) போட்டியிடுபவர்களின் குறைந்தபட்ச வயது 35-70 


* சோழ அரசின் முக்கிய வரி நிலவரி. இது காணிக்கடன் என்றழைக்கப்படுகிறது 


* பள்ளிச் சந்தம் - சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள


 * வேளாண் வகை - நிலங்களின் உரிமையாளர்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர்.


* உழுகுடி - வேளாண் பணி செய்பவர்கள்


* கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை சோழர்களின் நீர்ப்பாசனத்திற்கு எடுத்துக்காட்டு 


* ஊர் வாய்க்கால் - அனைவருக்கும் பயன்படும் வாய்க்கால்


* நாடு வாய்க்கால்கள் - நிர்வாகப் பிரிவின் மட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாய்க்கால்கள்


* நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டவை திருமுறைகள் 


* முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேத கல்லூரி ஒன்றை நிறுவினார். அக்கல்லூரியில் 14 ஆசிரியர்களின் வழிகாட்டலில் 340 மாணவர்கள் வேதங்களை கற்றனர்


* புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் ஊரிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலிலும் இதுபோன்ற கல்லூரிகள் உள்ளது


 * பெரியபுராணமும் கம்பராமாயணம் சோழர்கள் காலத்தை சேர்ந்தவை


 * அஞ்சு வண்ணத்தார் - மேற்கு ஆசியர்கள், அராபியர், யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், போன்ற கடல் கடந்து வாணிபம் செய்பவர்கள்


* மணிக்கிராமத்தார் - உள்நாட்டு வணிகம் செய்பவர்கள்


* ஐந்நூற்றுவர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் பெயர்களில் ஒருங்கிணைக்கப்பட்டது


மணிக்கு ஒருங்கிணைக்கப்பட்ட வணிகக் குழு ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் தலைமையிடம் கர்நாடக மாநிலம் ஐகோலில் உள்ளது



Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top