Pirkaala pandiyarkal notes / பிற்கால பாண்டியர்கள்

Krishna kumar
0

 பிற்கால பாண்டியர்கள்

TNPSC & TNUSRB FREE IMPORTANTE NOTES


* பாண்டியர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகம் கொற்கை. இதே முத்துக்குளிக்கும் இடமாக இருந்தது


* கடுங்கோன் என்னும் பாண்டிய அரசன் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர் களிடமிருந்து பாண்டியர்களின் பகுதிகளை மீட்டார்


* அரிகேசரி மாறவர்மன் என்னும் வலிமைமிக்க முதல் பாண்டிய அரசர் கி.பி 642ல் அரியணை ஏறினார்


* அரிகேசரி மாறவர்மன் சமணர்களை துன்புறுத்திய கூன்பாண்டியன் 


* திருஞானசம்பந்தரால் அரிகேசரி மாறவர்மன் சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறினார் 


 * வேள்விக்குடி செப்பேடுகள் இன் கொடையாளி-ஐடில் பராந்தக நெடுஞ்சடையன்


* முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற பாண்டிய அரசர்- இரண்டாம் ராஜசிம்மன்


* பாண்டியர்கள் மட்டுமே தமிழ் அரச வம்சமாக விளங்கினார்கள். அவர்களின் தலைநகரம் மதுரை


* பாண்டியர்கள் காலத்தில் மார்க்கோபோலோ இரண்டு முறை மதுரைக்கு வருகை புரிந்தார்


 * பாண்டிய அரசு செல்வச் செழிப்புமிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதி ஆகும் என மார்க்கோ போலோ புகழாரம் சூட்டுகிறார். இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக் கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்கிறது என மேலும் கூறினார்.


சடையவர்மன் சுந்தரபாண்டியன்


* இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர்


* ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்தவர்.


* மலைநாட்டு தலைவனான சேர அரசர் சுந்தர பாண்டியனுக்கு கப்பம் கட்டினார்


* மாளவ அரசர் வீர சோமேஸ்வரரை கண்ணனூர் என்ற இடத்தில் சுந்தரபாண்டியன் தோற்கடித்தார்


* சுந்தரபாண்டியன் டெல்லிக்கு சென்று அலாவுதீன் கில்ஜியின் பாதுகாப்பில் இருந்தார். இது மாலிக்கபூர் தமிழகத்தில் படையெடுப்பிற்கு காரணமாக மாறியது


* மதுரையில் டெல்லி சுல்தான்கள் கட்டப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது


 * பாண்டியர்களின் தலைநகரம் மதுரை. மதுரை கூடல் என்று அழைக்க அழைக்கப்படுகிறது


 * பாண்டிய மன்னர்கள் - கூடல் கோன், கூடல் காவலன் என்று அழைக்கப்பட்டார்

 

* பிராமண குடியிருப்பு - மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம்


 * நிலத்தின் உரிமையாளர் - பூமி புத்திரர் அல்லது வேளாளர்


 * பிரதம மந்திரி - உத்தர மந்திரி என அழைக்கப்பட்டார்


 * அரசு செயலகம் எழுத்து மண்டபம் என அழைக்கப்பட்டது


* பாண்டிய நாடு மண்டலம் - வளநாடு - நாடு - கூற்றங்கள்


* திருநெல்வேலி மாவட்டம் மானூர் எனும் ஊரில் கிபி 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிராம நிர்வாகம் தொடர்பான செய்திகளைக் கூறுகிறது


 * காயல் துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜமாலுதீன் எனும் அரேபிய வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது இந்த நிறுவனம் பாண்டியர்களுக்கு தேவையான குதிரைகளை இறக்குமதி செய்தது


* குதிரை வாணிபம் பற்றி வாசப் என்பவர் புகழ்ந்துள்ளார்.


Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top