Mughals Empire | mugalayar tamil notes

Krishna kumar
0

 முகலயப்பேரசு முக்கிய குறிப்புகள்  ( TNPSC & TNUSRB)


 * 1526 இல் நடைபெற்ற முதலாம் பானிபட் போரில் பாபர் இப்ராஹிம் லோடி இடையே நடைபெற்றது


. * கான்வா போர்-1527- ராணா சங்கா மற்றும் பாபர் இடையே நடைபெற்றது


* 1528- சந்தேரி போர் 


1529- ஆப்கானியர்களின் தலைவர்களை வெற்றி பெற்றார்


* துசுக் - இ -பாபரி - பாபரின் சுயசரிதை


பாபர் (1526-1530)


ஜாகுருதீன் முகமது பாபர் (நம்பிக்கையை காப்பவர்)


லோடியை வெற்றிபெற்று டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றி முகலாய ஆட்சியை துவங்கினார்


* பாபர் தனது தலைநகரை ஆக்ராவில் துவங்கினார்


 ஹுமாயூன்-1530-1540,1555,1556 


* 1539 ல் சௌசா போரிலும் ,1540 ல் கன்னோசி போரிலும் செர்ஷாவிடம் தோற்றார்


* பாரசீக அரசர் சபாவிட் வம்சத் சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 ல் டெல்லியை கைப்பற்றினார்


* 1556 ல் டெல்லியில் நூலக படிக்கட்டில் விழுந்து இறந்தார் 


ஷெர்ஷா (1540-1545)


ஷெர்ஷா பீகாரில் உள்ள சாசரம் பகுதியை ஆண்டுவந்த ஹசன் சூரி என்னும் ஆப்கானிய பிரபுவின் மகன். 


* செர்ஷாவை தவிர மற்ற - அனைவரும் முகலாய சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்கள். சூர் வம்சத்தை சேர்ந்தவர்


* அக்பர் (1556-1605)


* 1556 இல் நடைபெற்ற இரண்டாவது பானிபட் போரில் சூர் வம்சத்தை சேர்ந்த ஹெமு என்பவரை பைராம் கான் தோற்கடித்தார் பைராம் கான் அக்பரின் பாதுகாவலர்


* மத்திய இந்திய பகுதியை சேர்ந்த ராணி துர்காவதியை அக்பர் தோற்கடித்தார் 


* அகமதுநகர் அரசில் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி சந்த் பீவி மீதும் அக்பர் போர் தொடுத்தார்


* மேவார் அரசரான ராணா உதய் சிங்கை அக்பர் தோற்கடித்து 1568ல் சித்தூரையும் 1569 ராந்தம்பூரையும் கைப்பற்றினர்


* 1576 ல் ராணா பிரதாப் ஐ ஹால்திகட் போரில் அக்பர் தோற்கடித்தார்


* ராணா பிரதாப் சிங் சேத்தக் என்ற குதிரையில் தப்பித்து ஓடினார்


* 1605ல் அக்பர் இயற்கை எய்தினார் அவரது உடல் சிக்கந்தாராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது


* அக்பர் முஸ்லிமல்லாதோர் மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை நீக்கினார்


* இந்து பயணிகளின் மீது விதிக்கப்பட்ட புனித யாத்திரை வரியை நீக்கினார்


சூபி துறவி - சலீம் சிஸ்டி

சீக்கிய குரு - ராம்தாஸ் 

இசை மேதை- தான்சேன் 

ஓவியர் - தஸ்வந்த்


* ராம்தாசுக்கு அக்பர் வழங்கிய இடத்தில் ஹர்மிந்தர் சாகிப் கருவறை கட்டப்பட்டது


* பதேபூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பட்டதுதான் இபாதத்கானா 


* ஜஹாங்கீர் - (1605-1627)


* சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர்- உலகத்தை கைப்பற்றியவர் ஜஹாங்கிரின் மனைவி நூர்ஜஹான் 


ஐந்தாம் சீக்கிய குரு அர்ஜுன் சிங்கை ஜஹாங்கீர் தூக்கிலிட்டார்


 * ஜஹாங்கீர் ஆங்கிலேயர்களுக்கும் போர்ச்சுகீசியர் களுக்கும் அனுமதி வழங்கினார்


* இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் இன் பிரதிநிதியான தாமஸ் ரே ஜஹாங்கிரின் அரசவைக்கு வருகை புரிந்தார்


* ஆங்கிலேயரின் முதல் வணிக மையம் சூரத்தில் அமைந்தது


 * ஷாஜகான்-(1627-1658)


* குர்ரம் - ஷாஜகான் - உலகின் அரசு


*ஷாஜகான் தம் வாழ்நாளின் இறுதியில் எட்டு ஆண்டுகளை ஆக்ரா கோட்டையில் உள்ள சபர்ஜ் அரண்மனையில் கைதியாக கழித்தார் 


அவுரங்கசீப் (1658-1707)


முகலாய மன்னர்களில் வலிமை வாய்ந்த கடைசி அரசர்


இந்துக்களின் மீது ஜிஸ்யா வரியை மீண்டும் விதித்தார் * காமரூபா - அஸ்ஸாம்


* 1674 ல் சிவாஜி தம்மை மராட்டிய நாட்டின் பேரரசராக அறிவித்தார்


* * அவுரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் ஆங்கிலேயர்கள் மதராஸ் கல்கத்தா பம்பாய் ஆகிய இடங்களில் தங்கள் வணிக மையங்களை வலுவாக நிறுவினார்கள்


பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியில் வணிக மையத்தில் நிறுவினார்கள்


வக்கீல் - பிரதம மந்திரி


வஜீர் அல்லது திவான் - வருவாய்த்துறை மற்றும் செலவுகள்


 * மீர்பாக்க்ஷி-ராணுவத் துறை அமைச்சர்


* மீர்சமான்- அரண்மனை  நிர்வாகத்தைக் கவனித்தவர்கள் 


குவாஜி - தலைமை நீதிபதி


* சதா-உஸ்- சுதூர் - இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவர்கள்


* மன்சப்தாரி முறையை அக்பர் நடைமுறைப்படுத்தினார் நடைமுறை


அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் ராஜா தோடர்மால். இவர் புதிய வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் சுயயூர்கள் பாபர் பாரசீக கட்டிட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்


 * ஹுமாயுன் டெல்லி அரண்மனை தீன் - இ-பானா 


* செர்ஷா - புராணகிலா


ஷெர்ஷா அறிமுகம் செய்த வருவாய் முறையை பின்பற்றினார் ராஜா தோடர்மால் இன் ஜப்தி முறை வடக்கு மற்றும் மேற்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது 


பத்தாண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும் என்று நியமனம் செய்யப்பட்டது


முகலாயப் பேரரசர்கள் பழைய ஜக்தா முறையை ஜாஹிர் என பெயரிட்டு செயல்படுத்தினர் ܀


மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி அமில் குஜார்


அக்பர் தீன் இலாஹி என்ற புதிய மதத்தை ஆரம்பித்தார்


ஷெர்ஷாவின் மிக முக்கியமான நினைவுச் சின்னம் பீகாரில் சாசரம் எனும் இடத்தில் அமைந்துள்ள கல்லறை மாடம்  


அக்பர் ஆல் கட்டப்பட்டது - திவான் - இ - காஸ் , திவான் - இ -ஆம் ,பஞ்ச் மஹால்,ரங் மஹால்,சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா


* ஜஹாங்கீர் - சிக்கந்தாராவில் உள்ள அக்பர் கல்லறை ஜஹாங்கீரால் கட்டப்பட்டது.நூர்ஜஹானின் தந்தை இம்மத்-உத்-தௌலா கல்லறை


ஷாஜஹான் - யமுனை நதிக்கரையில் உள்ள தாஜ்மஹால் , மயிலாசனம் , ஆக்ராவில் உள்ள முத்து மசூதி, டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஜும்மா மசூதி , இவருடைய ஆட்சியில் முகலாயர்களின் புகழ் உச்சம் பெற்றது .


அவுரங்கசீப் மகன் ஆலம் ஷா தனது அம்மாவிற்காக அவுரங்காபாத்தில் கட்டப்பட்ட பிபிகா மக்பாரா எனும் கல்லறை மாடம் குறிப்பிடத்தக்கது

Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top