இன்று தொகைநிலை மற்றும் தொகா நிலை தொடர்களை பார்ப்போம்

Krishna kumar
0

 தொகைநிலைத் தொடர்கள்


 சொற்கள் தொடராகும் பொழுது இரு சொற்களுக்கு இடையே வினை, பண்பு, உவமை, உம்மை, வேற்றுமை முதலியவற்றின் உறுப்புகள் ஒன்று மறைந்து வரும் தொடருக்கு தொகைநிலைத்தொடர் என்று பொருள் .


தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும்

 தொகைநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்


 முதலில் தொகைநிலைத் தொடரைப்பற்றி விரிவாக பார்ப்போம்.


01 வினைத்தொகை 

02 பண்புத்தொகை 

03 உவமைத்தொகை 

04 உம்மைத்தொகை 

05 அன்மொழித்தொகை 

06 வேற்றுமைத்தொகை 


01 வினைத்தொகை 


காலம் காட்டும் இடைநிலைகள் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.


காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை ஆகும் .

இதில் இரண்டு சொல் வரும் முதல் சொல் வினைச்சொல், இரண்டாவது சொல் பெயர்ச்சொல்


வினைத்தொகையில் ஒற்று எழுத்து வராது.


 எடுத்துக்காட்டு


 ஊறுகாய் 

ஊறிய + காய் - இறந்தகாலம்

ஊறுகின்ற + காய் - எதிர்காலம்

ஊரும்+காய் - எதிர்காலம்

மூன்று காலத்திலும் வரும் 

(காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை ஆகும்)


ஊறு( முதல் சொல்) - வினையெச்சம்

காய் (இரண்டாவது சொல் ) - பெயர்ச்சொல்

(இதில் இரண்டு சொல் வரும் முதல் சொல் வினைச்சொல், இரண்டாவது சொல் பெயர்ச்சொல் )


சுடுசோறு - சுடு+ சோறு

அலைகடல் - அலை + கடல்


பண்புத்தொகை


 பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லுக்கும் இடையே மை என்னும் விகுதி, ஆகிய பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும் .


எடுத்துக்காட்டு 

செந்தாமரை - செம்மை + தாமரை

செம்மை - பண்புப்பெயர் 

தாமரை - பெயர்ச்சொல் 


தீந்தமிழ் -  தீம் + தமிழ்

 முத்தமிழ் - மூன்று + தமிழ் 

வட்டப்பலகை - வட்டம் + பலகை



இருபெயரொட்டு பண்புத்தொகை


 சிறப்பு பெயர் முன்னும் , பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய எனும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும் 



எடுத்துக்காட்டு 


இமயமலை 

(இமயம்- சிறப்பு பெயர், மலை - பொதுப்பெயர்)

 மல்லிகைப்பூ

( மல்லிகை  - சிறப்பு பெயர், பூ - பொதுப்பெயர்)

 சாரைப்பாம்பு 

(சாரை - சிறப்புப்பெயர் , பாம்பு - பொதுப்பெயர்)

அவியுணவு 

(அவி - சிறப்பு பெயர் , உணவு - பொதுப்பெயர்)




உவமைத்தொகை 


உவமைக்கும்  பொருளுக்கும் இடையே போல போன்ற நிகர அன்ன என்னும் உவம உருபுகள் ஒன்று மறைந்து உவமைத்தொகை எனப்படும்


எடுத்துக்காட்டு 

மலர்க்கை ( மலர் போன்ற கை )

விற்புருவம்  ( வில் போன்ற புருவம் )

தேன்மொழி ( தேன் போன்ற மொழி )


உருவகம்

 இல்லாத ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது உருவகம் .

இதில் உவமை சொல் இறுதியாக வரும்


 எடுத்துக்காட்டு

கைமலர் 

புருவவில்

மொழித்தேன் 




உம்மைத்தொகை 


இது சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச் சொல் மறைந்து வருவது உண்மை தொகையாகும் .


எடுத்துக்காட்டு 

இரவு பகல் ( இரவும் பகலும்)

 கபில பரணர் (கபிலரும் பரணரும் )

சேர சோழ பாண்டியர் (சேரனும் சோழனும் பாண்டியனும்)



 எண்ணும்மை 


இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வருவது என்னும் எனப்படும் 


எடுத்துக்காட்டு 


கண்ணும் கருத்தும்

சுனையும் புனல்களும்

பாலாடையும் நறு நெய்யும் தேனும் 



சிறப்பு எண்ணுமை


உடனும் எனும் சொல் வெளிப்படையாக வருவது சிறப்பு என்னும் உவமை எனப்படும் .

இதில் ஒரே ஒரு சொல் தான் வரும் 


எடுத்துக்காட்டு:- 


வானுடனும் (வான் + உடனும் )

கடவுளுடனும் ( கடவுள் + உடனும்)

மனிதருடனும் (மனிதன் + உடனும் )


உயர்வு சிறப்பும்மை 


ஒரு சொல்லில் மட்டும் உம் வெளிப்படையாக வந்து அது உயர்வு பொருளைத் தருமாயின் அது உயர்வு சிறப்பும்மை எனப்படும்


எடுத்துக்காட்டு


தேனினும் ( தேனைவிட இனிமையான )

வானினும் (வானை விட உயர்ந்த )

நிலத்தினும் (நிலத்தினும் பொறுமை உடைய )

பறையினும் ( பாறையை விட வலுவான )



இழிவு சிறப்பும்மை 


ஒரு சொல்லில் மட்டும் உம் வெளிப்படையாக வந்து அது இழிவான பொருளைத் தருமாயின் அது இழிவு சிறப்பும்மை எனப்படும்


 எடுத்துக்காட்டு 


குருகும் 

 வயிற்றுக்கும் 

செய்யினும்


முற்றும்மை


 ஒரு சொல்லில் மட்டும் உம் வெளிப்படையாக வந்து அது முற்றுப்பெற்ற பொருளைத் தருமாயின் அது முற்றும்மை எனப்படும்.


எடுத்துக்காட்டு 


விரல்கள் பத்தும்

தோள்கள் இரண்டும்  

ஏழு பிறப்பும்

யாவையும்

யாருக்கும் 


அன்மொழித்தொகை 


ஐந்து தொகை( பண்பு, வினை, உவமை, உம்மை, வேற்றுமை ) தொடருக்கு புறத்தே அல்லாத சில மொழிகள் ( சொல் ) மறைந்து நின்று பொருளைத் தருவது அன்மொழித்தொகை ஆகும் .


எடுத்துக்காட்டு 


பொற்கொடி வந்தாள் 

பொருள் :- பொன்னான வளையல் அணிந்தவள் வந்தாள்


கயல்விழி வந்தாள்

பொருள் :- பொருள்  கயல் என்றால் மீன் , மீன்போன்ற விழிகளை உடைய பெண் வந்தாள் 


சுடுகதிர் எழுந்தான்

இன்மொழி சொன்னாள்

உயிர் மெய் எழுத்து

மடக்கொடி 

அங்கணர் 

செவ்வாய்



அடுத்த பதிவில் பண்புத் தொகை பார்க்கலாம்

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top