விசையும் இயக்கமும் - 7 ஆம் வகுப்பு

Krishnakumar R
0

 விசையும் இயக்கமும்  - 7 ஆம் வகுப்பு

(Visaiyum iyakkamum - 7th standard )

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை அடைவதற்கு ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் தொலைவு எனப்படும்.

 ஒரு பொருளின் இயக்கத்தின் போது அதன் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிக குறைந்த நேர்கோட்டுத் தொலைவு இடப்பெயர்ச்சி எனப்படும் .

தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவை இரண்டும் ஒரே அலகால் குறிப்பிடப்படுகின்றன இவற்றின் SI அலகு மீட்டர் மீட்டராகும்.



ஒருவர் A என்ற புள்ளியில் இருந்து B என்ற புள்ளிக்கு  பாதை 1, பாதை 2 மற்றும் பாதை 3 வழியாக  செல்லும் போது  


பாதை 1 -ல் 10 கி.மி  கடந்த இயக்கம்  தொலைவு  எனப்படும்

 பாதை 2 - ல் 7கி.மி  கடந்த இயக்கம் தொலைவு எனப்படும்

 பாதை 3 -ல் 5கி.மி  கடந்த இயக்கம் இடப்பெயர்ச்சி எனப்படும்


நாட்டிக்கல் மைல் 

வான் மற்றும் கடல் போக்குவரத்துகளில் தொலைவினை அளவிடப் பயன்படுத்தும் அலகு நாட்டிக்கல் மைல் ஆகும் .ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.852 கிலோமீட்டர் ஆகும்.


 கப்பல் மற்றும் விமானங்கள் இல் வேகத்தை அளவிட பயன்படும் அலகு நாட் எனப்படும் .

ஒரு மணி நேரத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவைக் கடக்கின்றன என்பதை இது குறிக்கிறது 


வேகம் 

தொலைவு மாறுபடும் வீதம் வேகம் எனப்படும்

 வேகம் =தொலைவு / காலம் 

இதன் அலகு மீட்டர் / வினாடி 


வேகத்தை நாம் சீரான வேகம் மற்றும் சீரற்ற வேகம் என இரு வகைகளாக பிரிக்கலாம்.


 சீரான வேகம் 

ஒரு பொருள் சம கால இடைவெளியில் சம தொலைவில் கடந்தால் அப்போது சீரான வேகத்தில் செல்வதால் கருதப்படுகிறது .


சீரற்ற வேகம் 

ஒரு பொருள் வெவ்வேறு கால இடைவெளிகளில் வெவ்வேறு தொலைவு நடந்தால் அப்பொருள் சீரற்ற வேகத்தில் செல்வதாக கருதப்படுகிறது .


சராசரி வேகம் = கடந்த மொத்த தொலைவு / எடுத்துக் கொண்ட மொத்த காலம் 


1 கிலோமீட்டர் / மணி= 5 /18 மீட்டர் /வினாடி .

இதனை நாம் எவ்வாறு பெறுகிறோம் என்பதை காண்போம் .


1 கிலோமீட்டர் = 1000மீட்டர் 

1மணி = 3600 வினாடி 

1 கிலோமீட்டர் /மணி =1000 மீட்டர்/ 3600 வினாடி

= 5/18 மீட்டர் / வினாடி


பொதுவான வேகங்கள்

 ஆமை  - 0.1 மீட்டர்/வினாடி

மனிதர்களின் நடையின் வேகம் 1.4 மீட்டர்/ வினாடி

விழும் மழைத்துளியின் வேகம் -  9 -10 மீட்டர்/வினாடி 

ஓடும் பூனையின்  வேகம் - 14 மீட்டர் /வினாடி 

சைக்கிளின் வேகம் - 20 - 25 கிலோமீட்டர் /மணி 

சிறுத்தை ஓடும் வேகம் - 31 மீட்டர் /வினாடி 

வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தினை எரியும் வேகம் - 90- 100 மைல் / மணி 

பயணிகள் விமானத்தின் வேகம் - 180 மீட்டர் / வினாடி 

ராக்கெட்டின் வேகம் -5200 மீட்டர் / வினாடி 



திசைவேகம் 

இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் திசைவேகம் எனப்படும் 


திசைவேகம் (V)=இடப்பெயரச்சி /காலம்

 திசைவேகத்தின் SI அலகு மீட்டர் /வினாடி


        



சீரான திசைவேகம்

 ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது திசையினை மாற்றாமல் சம கால இடைவெளியில் சம அளவு இடபெயர்ச்சியை மேற்கொண்டால் அது சீரான திசை வேகத்தில் இயங்குகிறது எனப்படுகிறது

 எடுத்துக்காட்டு :- வெற்றிடத்தில் பயணம் செய்யும் ஒளி 


சீரான திசைவேகம் 

ஒரு பொருளானது தன் இயக்கத்தின் போது திசையோ அல்லது வேகத்தை மாற்றிக் கொண்டால் அது சீரற்ற திசைவேகத்தின் உள்ளது எனப்படுகிறது .

எடுத்துக்காட்டு :- ரயில் நிலையத்திற்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் தொடர்வண்டியின் இயக்கம் .


சராசரி திசைவேகம் 

ஒரு பொருள் கடந்த மொத்த தொலைவை, அது பயணிக்க எடுத்துக் கொண்ட மொத்த நேரத்தால் வகுக்கக் கிடைப்பது சராசரி திசைவேகம் எனப்படும்.

 சராசரி திசைவேகம் = மொத்தஇடப்பெயர்ச்சி/ எடுத்துக் கொண்ட மொத்த காலம்


முடுக்கம் 

திசைவேகம் மாறுபடும் வீதம் முடுக்கம் எனப்படும் .

வேறு வகையில் கூறுவதானால் ஒரு பொருளின் வேகத்திலோ அல்லது திசையிலோ மாற்றம் ஏற்பட்டால் அப்பொருள் முடுக்கம் அடைகிறது என கருதப்படுகிறது


முடுக்கம் = திசைவேகம் மாறுபாடு /காலம் 

= இறுதித் திசைவேகம்( v) -ஆரம்ப திசைவேகம் (u) / காலம்

a = (u- v)/t

 முடுக்கத்தின் SI அலகு மீட்டர்/ வினாடி


நேர் முடுக்கம் 

ஒரு பொருளின் திசைவேகம் ஆனது காலத்தினை பொருத்து அதிகரித்துக் கொண்டே சென்றால் அப்பொருளில் ஏற்படும் முடுக்கம் நேர் முடுக்கம் எனப்படும் 


எதிர் முடுக்கம்

 ஒரு பொருளின் திசைவேகம் ஆனது காலத்தை பொருத்து குறைந்துக் கொண்டே வந்தால் அப்பொருளின்  ஏற்படும் முடுக்கம் எதிர்முடுக்கம் எனப்படும் 


சிறுத்தையின் வேகம் 25 மீட்டர்/ வினாடி முதல் 30 மீட்டர் / வினாடி வரையாகும் .

சிறுத்தை தனது வேகத்தினை 2 வினாடியில் 0 விலிருந்து 20 மீட்டர் வினாடி ஆக மாற்றிக்கொள்ள முடியும் .


சீரான முடுக்கம் 

ஒரு பொருளின் திசைவேகத்தில் சீரான கால இடைவெளியில் காலத்தை பொறுத்து மாற்றம் (அதிகரித்தல் அல்லது குறைதல்) சீராக இருப்பின் அம்முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.


சீரற்ற முடுக்கம் 

 ஒவ்வொரு அலகு நேரத்திலும் ஒரு பொருளின் திசைவேகத்தில் காலத்தைப் பொருத்து ஏற்படும் மாற்றமானது சீரற்றதாக இருந்தால் அம்முடுக்கம்  ஆனது சீரற்ற முடுக்கம் எனப்படும்


         



தொலைவு -  காலம், வேகம் - காலம் வரைபடம் ஒப்பிடுத்தல் :-




புவியீர்ப்பு மையம் 

எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.


 ஒழுங்கான வடிவம் கொண்ட பொருளின் ஈர்ப்பு மையம் 

ஒழுங்கான வடிவம் கொண்ட பொருளின் ஈர்ப்பு மையம் ஆனது பொதுவாக அதன் வடிவியல் மையத்தில் அமைகிறது.




சமநிலை 

ஒரு பொருளை அதே நிலையில் வைத்துக்கொண்டு திறனை சமநிலை எனப்படும் .


சமநிலை மூன்று வகைப்படும் 

01 உறுதி சமநிலை 

02 உறுதியற்ற சமநிலை 

03 நடுநிலை சமநிலை 



சமநிலைக்கான நிபந்தனைகள்


01 பொருளின் ஈர்ப்பு மையம் குறைந்த உயரத்தில் அமைய வேண்டும் 

02 பொருளின் அடிப்படை அதிகரிக்க வேண்டும் 

03 ஒரு பொருளின் அடிப்பகுதி கனமாக இருக்கும் போது ஈர்ப்பு மையம் கீழே இருக்கும் எனவே அப்பொருள் நிலையாக இருக்கும் 

04 அடிப்பாகம் அகன்றதாக இருக்கும்போது பொருள் நிலையாக இருக்கிறது 


தஞ்சாவூர் பொம்மை 


பொம்மையின் ஈர்ப்பு மையமும் அதன் மொத்த எடையும் பொம்மையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது இதன் காரணமாக பொம்மை ஆனது மிக மெல்லிய அளவுடன் நடனம் போன்ற தொடர்ச்சியான இயக்கத்தை தோற்றுவிக்கிறது.


ஈர்ப்பு மையத்தின் நடைமுறை பயன்பாடுகள்


01 சொகுசுப் பேருந்துகளின் அடிப்பகுதியில் பொருள்களை வைப்பதற்கான அறைகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பேருந்தின் ஈர்ப்பு மையத்தின் உயரம் குறைக்கப்பட்டு, அதன் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.


02 இரண்டு அடுக்கு பேருந்துகளின் இரண்டாவது அடுக்கில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையைத் தவிர கூடுதல் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.


03 பந்தயக் கார்கள் உயரம் குறைவாகவும் அகலமானதாகவும் தயாரிக்கப்படுவதால் அவற்றின் சமநிலை அதிகரிக்கப்படுகிறது.


04 மேசை விளக்குகள் , காற்றாடிகள் போன்றவற்றின் சமநிலையை அதிகரிப்பதற்காக அவற்றின் அடிப் பரப்பானது அகலமாக தயாரிக்கப்படுகிறது

Tags

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top