பல்லவர்கள்
(முக்கிய குறிப்புக்கள் மட்டும் )
* பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம். தொண்டை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது
* கல்வெட்டுகள் - மண்டகப்பட்டு குகை கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டு
* செப்பேடுகள் - காசக்குடி செப்பேடுகள்
* இலக்கியங்கள் - மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி,பெரியபுராணம், நந்திக்கலம்பகம்
* யுவான் சுவாங்கின் குறிப்புகள்
* சிம்மவிஷ்ணு அவ்னி சிம்மர் (உலகின் சிங்கம்)
* முதலாம் மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர்கள்- சங்கீரண ஜதி, மத்த விலாசன், குணபாரன், சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன்
* முதலாம் நரசிம்மவர்மனின் சிறப்பு பெயர்கள்- மாமல்லன், வாதாபி கொண்டான்
* இரண்டாம் சிம்மவர்மன் மகன் சிம்மவிஷ்ணு. இவர் களப்பிரர்களை அழித்து வலுவான மகன்பல்லவ அரசை உருவாக்கினார்
* இரண்டாம் நரசிம்மவர்மன் - ராஜசிம்மன்
* கடைசி பல்லவ அரசர் அபாரஜித்
சிம்ம விஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன்
* இரண்டாம் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் முதலாம் மகேந்திரவர்மன்
* முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி. இவர் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது
* முதலாம் மகேந்திரவர்மன் திருநாவுக்கரசர் ( அப்பர்) ஆல் சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறினார்
* முதலாம் மகேந்திரவர்மனின் கட்டிடங்களை மகேந்திரபாணி என்று அழைக்கப்படுகிறது
* மத்தவிலாசப் பிரகசனம் ( குடிகாரர்களின் சூழ்ச்சி) என்ற நாடக நூலை சமஸ்கிருதமொழியில் எழுதினார். இந்த நூல் பௌத்தத்தை இழிவுபடுத்தும் விதமாக அமைந்தது
* மகேந்திரவர்மனை இரண்டாம் புலிகேசி போரில் கொன்றார்.
* முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் இவர் சாளுக்கியர் தலை நகரான வாதாபியைக் கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொன்றார்
* 1984ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் அட்டவணையில்மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது
* பல்லவர் காலக் கட்டடக்கலை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்
* 1. பாறை குடைவரை கோயில்கள்- மகேந்திரவர்மன் பாணி
* 2. ஒற்றைக்கல் ரதங்கள்- மாமல்லன் பாணி
*3, கட்டுமான கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
* மகேந்திரவர்மன் பாணி- மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி வல்லம் திருக்கழுக்குன்றம் , சீயமங்கலம் ஆகிய இடங்களிலுள்ள குகைக்கோயில்கள் சிறந்த எடுத்துக்காட்டு
* மாமல்லன் பாணி- மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள், பிரபலமான மண்டபங்கள், மகாபலிபுரத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கம் இதில் அர்ஜுனன் தபசு சிவபெருமானின் தலையில் இருந்த அருவியாக கொட்டும் கங்கை போன்றவை காணப்படுகிறது. உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களின் மிகப் பெரியது
* ராஜசிம்மன் பாணி- இரண்டாம் நரசிம்மவர்மன் கைலாசநாதர் கோயிலை கட்டினார் இது ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
நந்திவர்மன் பாணி- காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில்
* காஞ்சிபுரத்திலுள்ள கடிகை ( கல்வி மையம்) பல்லவர்கள் காலத்தில் புகழ்பெற்று விளங்கியது
* நியாய பாஷ்யா - வாத்ஸ்யாயர்
* தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடு தட்சிணசித்திரம் முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டது
* மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டி முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்தார். அவர் தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதினார்
* சமஸ்கிருத அறிஞர் பாரவி - கிருதார் ஜீனியம் எனும் வடமொழி காப்பியத்தை இயற்றினார். இவர் சிம்ம விஷ்ணு காலத்தில் வாழ்ந்தார்
* இரண்டாம் நந்திவர்மன் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தார்
* குடுமியான்மலை, திருமயம் ஆகிய இடங்களில் காணப்படும் கோயில்களில் இசை குறித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன
* பல்லவர்கால புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர்