TNPSC PRIVIOUS YEAR QUESTIONS / DAILY 25 QUESTIONS

Krishnakumar R
1

இனி தினமும் TNPSC-யில் இருந்து முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்களை பார்ப்போம். ( 25 வினாக்கள் ) பகுதி 1


TNPSC - PREVIOUS YEAR QUESTIONS GROUP - IV- 2011 HISTORY (வரலாறு )


1 .அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்?


A. பைராம்கான்

 B. சாந்த் பீவி 

C. ஷெர்ஷா 

D. ராணிதுர்காவதி.



2 ஜீனர் என்றால்?


A. வென்றவர் 

B. சிறந்தவீரர் 

C. அறிவு பெற்றவர் 

D. மத குரு.


3 இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைரஸ்ராய் ?


 A. சர்.ஸ்டோபோர்டு கிரிப்ஸ் 

B. பெதிக் லாரன்ஸ் 

C. லின்லித்கோ 

D. ஏ.வி. அலெக்சாண்டர்


4  சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு 

A) 1828 

B) 1829 

C) 1835 

D) 1838


5. தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்?


A. கட்டபொம்மன் 

B. புலித்தேவர் 

C. சின்னமருது

D. வேலுநாச்சியார் 


6. கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம் 


A. அமுக்தமால்யதா 

B. கம்பராமாயணம்

C. சிவஞானபோதம்

D. மகாபாரதம் 


7. கதை பொதி பாடல் என அழைக்கப்படுவது?. 


A. பெரியபுராணம் 

B. திருவிளையாடற்புராணம் 

C. விஷ்ணு புராணம்

 D. கந்தபுரானம் 


8 பல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு?


A. நாடு

B. கோட்டம்

C. ஊர் 

D. மண்டலம் 


9.தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர் ?


A. பண்டித ரமாபாய் 

B. டாக்டர் அன்னிபெசன்ட்

C. டாக்டர் முத்துலட்சுமி 

D. டாக்டர் சரோஜினி நாயுடு


10. 1857 - ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி?


A. கன்வர் சிங்

B. கோவிந்த்சிங் 

C. இரஞ்சித் சிங் 

D. இரண்டாம் பகதுார் ஷா


11. கி.பி. 1025 மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்?


A. கஜீராஹோ 

B. சோமநாதபுரம்

C. தில்வாரா 

D. பூரி ஜகன்நாதர் 


12. ஒவ்வொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்துான்றி படிக்க வேண்டும் எனக் கூறியவர்?


A. கால்டுவெல் 

B. டாக்டர் ஜி.யு.போப்

C. வீரமாமுனிவர்

D. டாக்டர் உ.வே.சா 





13. பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்?


A. தயானந்த சரஸ்வதி 

B. இராஜாராம் மோகன்ராய் 

C. சர் சையது அகமதுகான்

D. அன்னிபெசன்ட் 


14. சமுதாயத்தின் அடிப்படை அங்கம்?


A. குடும்பம் 

B. இல்லம் 

C. கிராமம் 

D. மாநகரம்


15. எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹீட் பட்டத்தை துறந்தார்?


 A. பஞ்சாப் படுகொலை 

B. முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வி 

C. சௌரி-சௌரா நிகழ்ச்சி 

D. காந்தியின் கைது. 


16 சுதேசி என்பதன் அகராதிப் பொருள்? 


A. பொருளாதார புறக்கணிப்பு 

B. அந்நிய துணிகள் எரிப்பு 

C. சொந்த நாடு 

D. அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு 



17 மங்கள் பாண்டே கொழுப்புதடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு? 


A. வேலூர் 

B. பேரக்பூர்

C. கான்பூர் 

D. மீரட்


19.முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?


A. தஞ்சாவூர் பெரிய கோவில்

B. மதுரை மீனாட்சியம்மன் கோவில்

C. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

D. சிதம்பரம் நடராஜர் கோயில்


- TNPSC - PREVIOUS YEAR QUESTIONS GROUP - IV- 2012 HISTORY ( வரலாறு )



20. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.


கூற்று (A) :இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது. 


காரணம்(R) வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின உண்மையான நோக்கமாகும்


 A. (A) மற்றும் (R)இரண்டும் சரி, மேலும்

  (R)என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 

B. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R)என்பது (A) விற்கு சரியான விளக்கம் 

C. (A) சரி, ஆனால் (R) தவறு

 D. (A) தவறு ஆனால் (R)சரி. 


21. காலவரிசைப்படி எழுதுக.


1. சாமவேதம் 

II.ரிக்வேதம்

III. யஜீர் வேதம்

IV.அதர்வணவேதம்


A. I.III, II மற்றும் IV 

B. III, IV,I மற்றும் 

C. IV,I,II மற்றும் III 

D..II,II,I மற்றும் IV.



22.கீழ்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக

1. புதியகற்காலம் 

II.இடைக்கற்காலம்

III. செப்புக்காலம்

IV.பழைய கற்காலம் 


A. II.III, I மற்றும் IV 

B. IV,II,I மற்றும் III

C. I,III,II மற்றும் IV 

D..III,I,IVமற்றும் II 


23. பட்டியல் | ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கபட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு


பட்டியல் |                  பட்டியல் II 

a. நீதிக்கட்சி  - 1. பெரியார் ஈ.வே. ராமசாமி

b. தேவதாசி முறை - 2. டாக்டர் எஸ்.தருமாம்பாள் 

C.வைக்கம் வீரர் - 3.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 

d. வீரத்தமிழன்னை - 4. தியகராய செட்டியார்.


A. 4  3  1  2

B. 1  2  3  4

C. 2  3  4  1 

D. 4  2  1  3 


24 கீழ்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? 


A. போன்ஸ்லே - நாக்பூர் 

B. ஹோல்கார் - இந்தோர்

C. பேஷ்வா - டில்லி

D. சிந்தியா - குவாலியர்


25 கீழ்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? 


A. சுயராஜ்யக்கட்சி -   ஊ.சு .தாஸ்

B. பார்வர்டு பிளாக் - சுபாஷ் சந்திரபோஸ்

C. முஸ்லீம் லீக் கட்சி - நவாப் சலிமுல்லாகான் 

D. நீதிக்கட்சி  - ஈ.வே.ரா பெரியார்


 அடுத்த பதிவில் மேலும் சில வினாக்களைப் பார்ப்போம்.

Post a Comment

1Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Daily 25 previous year questions👌
    Ethu vera level👏👏👏

    ReplyDelete
Post a Comment

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top