உவமையால் விளக்கப்படும் பொருள் :
1. செம்புலப் பெயர் நீர் போல - சேர்ந்ததன் தன்மையர்தல், ஒன்று சேர்ந்திருத்தல்
2. புனையா ஓவியம் போல - அழகுபடுத்தாத / வண்ணம் தீட்டப்படாத ஓவியம்
3. காயமே அது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா - நிலையாமை
4. எரிமுன்னர் வைத்தூறு போல - அழிவு உறுதி
5. மடைதிறந்த வெள்ளம் போல - விரைவு
6. செப்புமொழி பதினெட்டுடையாள் சிந்தனை ஒன்றுடையாள் - ஒருமைப்பாடு
7. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
8. சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிப்பிறப்பை மீறிய சிறப்பு, மேன்மை
9. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - பாசம்
10. வில் போன்ற - புருவம்
11. நெடும் புனலுள் வெல்லும் முதலை - இடன்அறிதல்
12. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல - திறமையற்றவனின் அதிர்ஷ்டம்
13. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் - தாமதமான முடிவு (அ) செயல்
14. பழுமரம் நாடும் பறவை போல - பயன்பெறுதல் / முயற்சி செய்தல்
15. எள்ளினுள் எண்ணெய் போல - மறைந்திருத்தல்
16. ஒரு தாய் வயிற்று மக்கள் போல - ஒற்றுமை
17. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தாற் போல - இழப்பு
18. பழம் நழுவி பாலில் விழுந்தது போல - விரும்பியதுகிடைத்தல்
19. அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல - ஏமாற்றம்
20. குரங்கின் கையில் கிடைத்த கொள்ளி போல - அளிப்பது
21. பவளம் போல் செவ்வாய்- வண்ணம்
22. பேடிகை வாளாண்மை போலக் கெடும் - முயற்சிஇல்லாதவன்
23. கண்ணை இமை காப்பது போல - பேணுதல்
24. மலையைத் தோண்டி எலி பிடிப்பது போல - வீண் செயல்
25. அணை கடந்த வெள்ளம் போல - வேகம் / சரளமாக
26. கட்டுக்கடங்காத காளை போல - ஊதாரி
27. விழலுக்கு இறைத்த நீர் போல - பயனின்மை
28. ஈன்றோர் நீர்த்த குழவி போல - துன்பம்
29. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - பொறுமை
30. அடியற்ற மரம் போல - வீழ்தல், நிலையற்று வீழ்தல்
31. இலவு காத்த கிளிபோல - ஏமாற்றம்
32 கடல் மடை திறந்த வெள்ளம் போல - வெளியேறுதல், விரைவு
33. பகலவனைக் கண்ட பனி போல - நீங்குதல், துன்பம் விலகுதல்
34. உள்ளங்கை நெல்லிக் கனிபோல - தெளிவு
35. தாமரையிலைத் தண்ணீர் போல -
பற்றின்மை
36. கடலில் கரைத்த பெருங்காயம் போல - பயனின்மை
37. இடியோசை கேட்ட நாகம் போல - நடுக்கம்
38. தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
39. நகமும், சதையும் போல - இணைபிரியாமை, ஒற்றுமை
40. எலியும், பூனையும் போல- பகை
41. நிலத்தறைந்தான் கை பிளந்தற்று கேடு - கேடு, துன்பம்
42. நுணலும், தன் வாயால் கெடும் - அறிவிலி, அறிவில்லாதவர்
43. கிணறு, தோண்ட பூதம் கிளம்பியது போல - எதிர்பாராத தீமை
44. குன்றின் மேலிட்ட விளக்கு போல - விளக்கமாக , தெளிவாக
45. குடத்திலிட்ட விளக்கு போல - மறைவு, அடக்கம்
46. வளர்பிறை போல - வளர்தல்
47. ஏறுநடை போல - செயல்
48. பாம்பும், கீரியும் போல - பகை
49. வெள்ளத் தனைய மலர்நீட்டம் போல - முயற்சிக்கேற்ற பலன்
50. மின்னாமல் இடி இடித்தது போல - எதிர்பாராத துக்கம்
51. மழை முகம் காணா பயிர் போல - வாட்டம், வாடுத்தல்
52. வேலியே பயிரை மேய்ந்தது போல - துரோகம்
53. இருதலைக் கொள்ளி எறும்புபோல - தவிப்பு
54. இலைமறைக்காய் போல - மறைபொருள்
55. பசுமரத்தாணி போல - எளிதில் பதிதல்
56. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது - மிக்க மகிழ்ச்சி
57. புளியம் பழமும் ஓடும் போல - ஒட்டாமை
58. புற்றீசல் போல - பெருகுதல்
59. பசுந்தோல் போர்த்திய புலி போல - ஏமாற்றுதல்
60. நத்தைக்குள் முத்து போல - மேன்மை,உயர்வு
61. சேற்றில் பிறந்த செந்தாமரை போல - மேன்மை
62. பாம்பின் வாய்த் தேரை போல - மீளாமை
63. நீரும், நெருப்பும் போல - விலகுதல்
64. கடன்பட்டார் நெஞ்சம் போல - வருத்தம், கலக்கம்
65. எட்டாப் பழம் புளித்தது போல - ஏமாற்றம்
66. ஆப்பசைத்த குரங்கு போல - வேதனை, துயரம்
67. அரைக் கிணறு தாண்டியது போல - ஆபத்து
68. அச்சில் வார்த்தாற் போல - ஒற்றுமை / உண்மை தன்மை
69. உமி குற்றிக் கை சலித்தது போல - பயனற்ற செயல்
70. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல - பெருந்துன்பம்
71. அடுத்தது காட்டும் பளிங்கு போல - தெளிவு, வெளிப்படுதல்
72. அத்தி பூத்தாற் போல - அறிய செயல் , அருமை
73. அன்னம் போல - நடை
74. இணரூழ்த்தும் நாறா மலரனையர் - கற்றதை விரித்துரைக்க இயலாதவர்
75. ஊருணி நீர் நிறைந்தற்று - பண்பாளர் செல்வம்
76. கனிருப்பக்காய் கவர்ந்தது போல - இன்னாச்சொல் கூறுதல், கடுஞ்சொல் கூறுதல்
77. கிணற்றுத் தவளை போல - அறியாமை
78. குன்றேறி யானைப் போர் கண்டது போல - செல்வத்தின் சிறப்பு
79. திங்களை நாய் குரைத்தற்று - பயனற்ற செயல்
80. நவில்தோறும் நூல் நயம்போல - பண்பாளர் தொடர்பு
81. நாய் பெற்ற தெங்கம்பழம் போல - பயனற்றது
82. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன - நாரையின் மூக்கு
83. மலரும் மணமும் போல - நெருக்கம் ,ஒற்றுமை
84. மதில்மேல் பூனை போல - உறுதியற்றது
85. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது - பேராசை
86. வெண்ணிலவும் வானும் போல - நெருங்கிய நட்பு
87. நன்பாற் கலம் தீமையால் திரிதல் - கூட நட்பில் அழிதல்
88. காராண்மை போல ஒழுகுதல் - வள்ளல் தன்மை
89. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்ததுபோல - எதிர்பாராத தீமை
90. தானுருகி ஒளிதரும் மெழுகு போல - தியாகம்
91. அன்றலர்ந்த தாமரை போல - முக மலர்ச்சி
92. ஆமை போல ஐந்தடங்கல் - அடக்கம்
93. உடுக்கை இழந்தவன்- நட்பு
95. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல - பார்க்க விரும்பி ஒருவர் எதிரே வருவது / எதிர்பாராத நன்மை
94. கூர்மையரேனும் மரம் போல்வர் - மக்கட் பண்பு இல்லாதவர்
96. தாமரை போல - முகம்
97. யானையாற் யானையாத் தற்று - ஒரு செயலைக் கொண்டு மற்றொர் செயலை முடித்தல்
98. பல்லுயிர் காத்த மருந்தென - இயேசு பிரான்
99. வள்லுகிர் புலியெலாம ஒரு வழி புகுந்தாற்போல - படைகளெலாம் ஓரிடத்தில் திரளுதல்
100. அரியினொடு அரியினம் அடர்ப்ப போல - அரசரோடு அரசர் போரிடுதல்
101. மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீர்போல - மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்
102. மதுவுண்ட குரங்கு போல -
மயக்கம்
103. சூழ்கொண்ட மேகம் போல - எதிர்பார்ப்பு
104. கடுகு உள்ளம் போல - சிறுமை
105. செய்தி காட்டுத் தீ பரவியது போல - விரைவு
106. நூலறுந்த பட்டம் போல - தவிப்பு
107. திருடனை தேள் கொட்டியது போல - திகைப்பு
108. இஞ்சி தின்ற குரங்கு போல - திகைப்பு
109. நீர்க்குமிழி யன்ன வாழ்க்கை போல - நிலையாமை
110. குந்தித் தின்றாள் குன்றும் மாளும் - சோம்பல்