Sutteluthu/ சுட்டெழுது - அ, இ, உ (அண்மைசுட்டு/ சேய்மைசுட்டு/ அகசுட்டு/புறசுட்டு) சுட்டுத்திரிப்பு
சுட்டெழுது - அ, இ, உ
ஒன்றை சுட்டி காட்ட வரும் எழுத்து சுட்டெழுது
எடுத்துக்காட்டு
அவன், இவன், இவள், உவன், உவள்
உ என்னும் சுட்டெழுத்து தற்போது மறைந்துவிட்டது
இது சங்க காலத்தில் வழக்கில் இருந்தது
உதுக்காண் (அங்கே பார்)
உப்பக்கம் (முதுகுப்பக்கம்)
உம்பர் (மேலே)
சுட்டெழுது 4 வகைப்படும்
அண்மைசுட்டு
சேய்மைசுட்டு
அகசுட்டு
புறசுட்டு
அண்மை சுட்டு
இ எனும் எழுத்து அருகிலுள்ள பொருளைச் சுட்டும் ஆகவே தான் அண்மைசுட்டு எனப்படும்
எடுத்துக்காட்டு
இவன், இவள், இப்பசு
2 சேய்மை சுட்டு
ஆ என்னும் எழுத்து தொலைவில் உள்ளதை சுட்டும் எனவே இது சேய்மை சுட்டு எனப்படும்
.
எடுத்துக்காட்டு
அவன், அவள், அப்பசு
அகசுட்டு
சொல்லில் உள்ள சுட்டெழுதை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தராது
இவ்வாறு சொல்லின் அகத்தே நின்று சுட்டுப் பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்
எடுத்துக்காட்டு
அவள், இவன், இவள்,
புறச்சுட்டு
சொற்களில் உள்ள சுட்டெழுத்து நீக்கினால் பிற எழுத்துக்கள் தனிச் சொல்லாக நின்று பொருளைத்தரும்
இது புறசுட்டு எனப்படும்
எடுத்துக்காட்டு
அப்பசு
இதில் அ என்னும் சுட்டெழுத்தை நீக்கினால் பசு என்று பொருள் தரும்
இப்பையன்
இதில் இ என்னும் சுட்டெழுத்தை நீக்கினால் பையன் என்று பொருள் தரும்
சுட்டு திரிபு
சொற்களில் உள்ள அ, இ எனும் சுட்டெழுதுகள் அந்த, இந்த என திரிந்து வழங்குவதனை சுட்டு திரிபு என்பர்
எடுத்துக்காட்டு
அப்பசு (சுட்டெழுது) - அந்த பசு (சுட்டுதிரிபு)
அம்மனிதன் (சுட்டெழுது) - அந்த மனிதன் (சுட்டுதிரிபு)
இப்பையன்(சுட்டெழுது)- இந்தபையன் (சுட்டுதிரிபு)
வினாக்கள்:-
1 சுட்டெழுத்து எத்தனை வகைப்படும் ?
2 தற்காலத்தில் வழக்கில் இல்லாத சுட்டெழுது என்ன?
3 சுட்டு திரிபு எடுத்துக்காட்டு
4 சுட்டுஎழுத்தை நீக்கினால் பொருள் தருவது ?