ஐகாரக் குறுக்கம்
ஐ என்னும் உயிர் நெடில் எழுத்து தனியாக ஒலித்தால்
தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கும்
ஆனால் இது மற்ற எழுத்துக்களுடன் கூடி சொல்லின்
முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களில் வரும்போது
தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்
இதற்கு ஐகாரகுறுக்கம் என்று பெயர்
எடுத்துக்காட்டு
ஐந்து, ஐப்பசி - ஐ முதலில் வந்துள்ளது - 1 ½
மாத்திரை அளவு ஒலிக்கும்
தலைவன் (லை=ல்+ஐ) - ஐ இடையில் வந்துள்ளது- ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும்
வாழை, தழை, இலை - ஐ இறுதியில் வந்துள்ளது -ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும்
ஔகாரகுறுக்கம்
ஒள என்னும் உயிர் நெடில் எழுத்து தனியாக ஒலிக்கும்
போது இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கும்
.ஆனால் ஒரு சொல்லின் முதலில் வரும் போது
ஔகாரம் 1 ½ மாத்திரை அளவு ஒலிக்கும்
இதற்கு ஔகாரகுறுக்கம் என்று பெயர்
ஔ என்னும் எழுத்து சொல்லின் முதலில் மட்டுமே வரும்
சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது
எடுத்துக்காட்டு
ஒளவையார் - ஒலிக்கும் மாத்திரை அளவு 1 ½
வெளவால் - ஒலிக்கும் மாத்திரை அளவு 1 ½
மகரக்குறுக்கம்
ம் என்னும் மெய் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்
‘னகர’ ,‘ணகர’ மெய்களின் பின் உள்ள மகரம் அரை மாத்திரையிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவே ஒலிக்கும்
எடுத்துக்காட்டு
ன்ம்
ண்ம்
நிலைமொழி ஈற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் வந்து புணரும்போது நிலைமொழி ஈற்றில் உள்ள மகரம் கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்
எடுத்துக்காட்டு
வரும் வண்டி
தரும் வளவன்
ஆயுதகுறுக்கம்
தனிக்குறிலை அடுத்துவரும் ல், ள் எனும் எழுத்துக்கள் வருமொழியின் முதலெழுத்துக்களாகிய தகரத்துடன் புணரும்போது நிலைமொழி ஈற்றெழுதும் வருமொழியின் முதல் எழுத்தும் கெட்டு ஆயுதமும் பிற எழுத்துக்களும் பிறக்கும்.
அவ்வாறு பிறக்கும் ஆயுதம் கால் மாத்திரை அளவே ஒலிக்கும் இதற்க்கு ஆயுத குறுக்கம் என்று பெயர்.
எடுத்துக்காட்டு
கல் தீது
கல் நிலைமொழி தீது வரும்மொழி
கஃறீது
முள் தீது
முள் நிலைமொழி தீது வரும்மொழி
முஃடீது.
பல் தீது
பல் நிலைமொழி தீது வரும்மொழி
பாஃறீது
உயிர் எழுத்து
உயிர் குறில் - 1மாத்திரை
உயிர் நெடில் - 2 மாத்திரை
மெய் எழுத்து - ½ மாத்திரை
உயிர்மெய் எழுத்து
உயிர்மெய் குறில் - 1 மாத்திரை
உயிர்மெய் நெடில் - 2 மாத்திரை
ஆயுதம் - ½ மாத்திரை
உயிர் அளபெடை - 3 மாத்திரை
ஒற்று அளபெடை - 1மாத்திரை
குற்றியலுகரம் - ½ மாத்திரை
முற்றியலுகரம் - 1 மாத்திரை
குற்றியலிகரம் - ½ மாத்திரை
ஐகாரகுறுக்கம் -
முதல் - 1 ½ மாத்திரை
இடை - 1 மாத்திரை
கடை - 1மாத்திரை
ஔகாரகுறுக்கம் - 1 ½ மாத்திரை
மகரகுறுக்கம் - ¼ மாத்திரை
ஆயுதகுறுக்கம் - ¼ மாத்திரை